பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

91

அருள்நெறி முழக்கம்


அவர்கள் குன்றக்குடிக் கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
1985 நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை.
கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்
மணிவிழா.
1986 தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல்.
இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி. “Kundrakkudi Pattern” என்று அறிவித்தது.
1989 இவர் எழுதிய"ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் (D.lit) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1991 இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.
அரபுநாடுகள் பயணம்.
1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் "தமிழ்ப்பேரவைச் செம்மல்" விருது வழங்கிச் சிறப்பித்தது.
1995 இறைநிலையடைதல்.