பக்கம்:அரை மனிதன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அரை மனிதன்


 என் தம்பி கெட்டிக்காரன். அவன் எப்படியும் முன்னுக்கு வந்துவிடுவான். அவன் அன்றைக்கு ஒடிச்சென்று காரில் மாட்டிக் கொள்ள இருந்தான். அவன் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்குத்தான் ஒடிப்போய் அவனை இழுத்தேன்; அவன் பிழைத்தான்; நானும் கூடத்தான் பிழைத்துக் கொண்டேன். ஆனால் என் கால் ஒன்றை மட்டும் அந்தச் சக்கரம் அன்று சுவை பார்த்தது. என் ரத்தம் சிவப்பாக இருந்தது. அந்தச் சக்கரம் அந்தச் சிவப்பைத் தொட்டுப்பார்த்தது.

'சிவந்த மண்' அந்த இடம் ஆயிற்று. இந்த நாடு சிவந்த மண் ஆகிறதோ இல்லையோ தெரியாது. அந்த இடம் என்னால் சிவந்தமண் ஆகியது. எல்லோரும் அதிருஷ்டம் என்றார்கள் எனக்கு என் கால் போனதை. அதாவது என் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லையே அதைத்தான் அதிருஷ்டம் என்றார்கள். அதைவிட என் தம்பியின் ஜாதகத்தைப் பாராட்டினார்கள். அதாவது அவன் ஒரு கண்டத்திலிருந்து தப்பினானே அதற்கு.

நான் எதுக்குச் சொல்ல வந்தேன் என்றால் எங்கள் வீட்டுக்கு இந்த மாதிரி அதிருஷ்டம் வரும் என்று நாங்கள் எதிர் பார்க்கவே இல்லை. அதை வைத்துக் கொண்டுதான் எங்கள் அப்பா ஒரு அச்சுத் தொழில் நிலையம் திறந்தார். அதற்கு முன்னால் எங்கெங்கோ சென்று 'பொறுக்கிக் கொண்டு' இருந்தார். அதுதான் எழுத்துகளைப் பொறுக்கும் கம்பாஸ்டர் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் எப்படியாவது ஒரு அச்சாபிசுக்கு அதிகாரி ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதை அந்தச் சின்ன வயதிலேயே நான் நிறைவேற்றிக் கொடுக்க முடிந்தது. அதாவது கார் என் காலை முறித்துவிட்டதால் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அது ஒரு அதிருஷ்டம் தானே. நான் நிச்சயமாக எந்தக் காலத்திலே பத்தாயிரத்தைப் பார்க்க முடியும்.

இதெல்லாம் திடீர் பணக்காரன் ஆவதற்கு நல்ல வழிகள் என்று நினைக்கிறேன். 'ஒரு ரூபாய் கட்டினால் ஒரு லட்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/10&oldid=1461916" இலிருந்து மீள்விக்கப்பட்டது