பக்கம்:அரை மனிதன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



98

அரை மனிதன்



அவளுக்கு இப்பொழுதுதான் நீ கிடைத்திருக்கிறாய். எனக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடு. நீங்கள் எல்லாம் அடிக்கடி போய் வருகிற அத்தச் சிறை எப்படி இருக்கிறது என்று அதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அரிய சந்தர்ப்பத்தை நான் இழக்க விரும்பவில்லை. நீ அதைத் திருடிக் கொடுக்கவில்லை. அது உன்னால் முடியாது. அவள் நீ திருடியதாகச் சொன்னது அவள் உன்னிடம் வைத்த மதிப்பினால். அவள் உள்ளத்தில் நீ இடம் பெற்றிருக்கிறாய். நெக்லஸ் கொடுத்தால் அது உன்னால் கொடுக்கப்பட வேண்டும். அதை நீ அவளுக்கு உன் கையால் அணிய வேண்டும். அதைத்தான் அவள் தனக்குப் பெருமையாக நினைத்திருக்கிறாள். அது அவள் இப்படி நினைத்திருக்கிறாள். அதனால்தான் அவள் அப்படிச் சொல்லி இருக்கிறாள்."

அங்கிருந்த கான்ஸ்டேபிள் "என்னப்பா ஏதோ உங்களுக்குள் பேச்சு"

"இது எங்கள் குடும்ப விவகாரம்" என்றேன். அவ்வாறு கேட்டது அதே பழைய கான்ஸ்டேபிள்தான். ரயிலடியில் நானும் என் தம்பியும் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டான். ஆனால் அன்று அவன் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது சிரித்தான். இப்பொழுது சிரிக்கவில்லை.

""என்னப்பா அப்பேர்ப்பட்ட குடும்ப விவகாரம்; என் கிட்டே சொல்லக் கூடாதா"

"என் தங்கையை இவருக்குக் கொடுக்க நிச்சயம் செய்து விட்டேன். அவருக்குக் கலியாணம் செய்துவிட்டு உடனே உள்ளே வந்து விடுகிறேன். அதற்கு மட்டும் உத்திரவு கொடுக்க வேண்டுகிறேன்."

"உனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டுமே”

"அது என் தங்கையால் முடியும். அவளுக்கு ஒரு மாஜிஸ்ட்ரேட்டு தெரியும். அவள் வந்தால் அவளால் அது முடியும்" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/100&oldid=1461997" இலிருந்து மீள்விக்கப்பட்டது