பக்கம்:அரை மனிதன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

99



அதற்குள் என் தங்கை வந்தாள். அதுதான் அம்மாகண்ணு. அவள் கண்ணகி போலக் கொதித்து எழுந்தாள். யார் உங்களைத் திருடன் என்று சொன்னது. "கள்வனோ என் அண்ணன்". அவளைக் கத்தி நடிக்கச் சொன்னால் அவள் கத்தி இருப்பாள்.

"யார்"யா சொன்னது அவர் திருடினார் என்று? அந்த நெக்லசைக் கொண்டு வந்து வை. அதன் சொந்தக்காரி வரட்டும் நான் கேட்கிறேன்" என்றாள்.

எனக்குப் பழைய பாண்டியன் அவைக்களம் நினைவுக்கு வந்தது.

"கள்வனோ என் கணவன்?" என்று கதறினாள் அந்தக் கண்ணகி. பாண்டியன் அவைக் களத்து முன்னால் நின்றாள். கொண்டுவா அந்தச் சிலம்பை என்று கேட்டாள். அதை உடைத்தாள். அதிலிருந்து மாணிக்கப் பரல் தெறித்து அந்த மன்னன் வாயில் பட்டது. நீதி பிறந்தது. அவள் நீதியை நிலை நாட்ட வந்தாள்.

நான் சொன்னேன். "இங்கே நீதி தேவை இல்லை. எது நல்லதோ அதுதான் நீதி. உன்னை உண்மையைச் சொல்ல அழைக்கவில்லை. உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் அழைத்தேன். நீதி வேறு; உண்மை வேறு. நீதிக்காக நீ போராட வேண்டியது இல்லை. உண்மைக்காகப் போராடு.”

எது உண்மை? அதை வெளியே சொன்னால் என்ன நன்மை? எண்ணிப்பார். எது நன்மை தருகிறதோ அதுதான் உண்மை. நீ என்னிடம் சொன்ன உண்மை என்ன? ரங்கன் தானே கொண்டு வந்து கொடுத்தான்?. இப்பொழுது நீ எப்படி மாற்றிச் சொல்ல முடியும்? அதை அவன்தான் கொண்டு வந்து கொடுத்தான். ஆனால் அந்த உண்மை போலீசுக்குத் தேவை இல்லை. நகை என்னிடம் இருந்தது. நான் குற்றவாளி. நான் வேறு யாரையும் காட்டிக் கொடுக்காதவரை நான்தான் குற்ற வாளி. நீ அவசரப்பட வேண்டாம். என் தங்கை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/101&oldid=1461998" இலிருந்து மீள்விக்கப்பட்டது