பக்கம்:அரை மனிதன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அரை மனிதன்



பேச்சைக் கேட்டு நடப்பாள் என்று நம்புகிறேன். அவள் மறுத்துப் பேசமாட்டாள் என்று நினைக்கிறேன். நான் ஜாமீனில் வெளியே வரவேண்டாம். அதற்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன். நீ போய் உன் பழைய வாடிக்கைக்காரரை அழைத்துவா. அது செய்தால் போதும்.”

அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

"எப்படியோ நீ வெளியே வந்தால் போதும் அது தான் அவள் சொன்னது.

நான் வெளியே போய் என்ன செய்யப் போகிறேன். நான் யாருக்காக வாழப்போகிறேன். அவள் திருமணத்தைப் பார்த்து விட்டு மறுபடியும் நான் உள்ளே போகவே விரும்புகிறேன். இந்தச் சமுதாயத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? எனக்கு என்று இந்த உலகத்தில் கண்ணீர் வடிக்க என் தங்கை ஒருத்தியைத்தான் கண்டேன். அவள் இனி உதிரியாக வாழத் தேவை இல்லை.

அடையாளம் காட்ட முடியாத அந்தஸ்துக்காரர்களுக்கு அவள் இனி பயப்பட வேண்டியதில்லை. அவளும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய தகுதி பெற்றால் அது போதும்.

அதற்குள் என் அம்மா ஒடோடி வந்தாள்.

"அடப்பாவி, இதற்காகவா உன்னை ஆளாக்கினேன், நீ ஒரு மனிதனா?" என்று கேட்டாள்.

"இல்லை அரை மனிதன்" என்று சொன்னேன். ஆரம்பத்தில் கதைத் தொடக்கத்தில் உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தும் பொழுதே சொன்னேனே. அந்த வாசகத்தைத்தான் இப்பொழுது அம்மாவிடம் சொன்னேன்.

"இந்த உலகத்தில் என்னைப்போல் அரை மனிதர்கள் இருக்கிறார்கள், ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கேள்விப்பட்டு இருப்பாய். வாழ வழி இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/102&oldid=1461999" இலிருந்து மீள்விக்கப்பட்டது