பக்கம்:அரை மனிதன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

105



"அப்பா உன் முகத்தில் விழிப்பதாக இல்லை" என்றார்.

"அப்படித்தான் ஒவ்வொரு அப்பாவும் இந்தக் காலத்தில் அவசரப்பட்டுச் சொல்லி விடுவார்கள். எனக்குத் தெரியும் அவர் வரமாட்டார் என்று"

"அவன் எக்கேடு கெட்டுத் தொலையட்டும் எனக்கு என்ன" என்றுதான் சொல்லுகிறார்.

"இப்படித்தான் ஒவ்வொரு தந்தையும் இப்பொழுது பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள். அதில் அவர் ஒன்றும் விதிவிலக்கல்ல."

"முன்னால் அவன் தன்னை வேலைக்காரன் என்று சொன்னதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்பொழுது அவர் என்னைத் திருடன் என்றே நம்பிவிட்டார்; அதை நான் தாங்கிக் கொள்ளவேண்டும்.”

"அப்படீன்னா நீ திருடவில்லையா? அவளுக்காக அதை நீ திருடித் தரவில்லையா? அது அவளிடம் தான் இருந்ததாமே”

"அவளிடம்தான் இருந்தது. அதை ரங்கன் அவளுக்குக் கொடுத்தான். அதை அவள் என்னிடம் கொடுத்தாள்."

"அப்படியானால் ரங்கன்தான் திருடினான். அவன் உள்ளே போகட்டும்."

"அவன் உள்ளே போய்விட்டால் அம்மாகண்ணுவின் கதி? உன் மகன் தான் அவளை வைத்துக் கொள்ள நேரிடும்."

'பளீர்' என்று ஒரு அறை என் கன்னத்தில் விட்டாள்.

"அம்மா! இது மூன்றாவது அறை. ஏசுநாதர் இரண்டு கன்னத்தைக் காட்டச் சொன்னார். மூன்று முறை அடிவாங்க வேண்டும் என்று அவர் எண்ணிப்பார்த்து இருக்கமாட்டார். மறுபடியும் இயேசு பிறந்தால் அவரிடம் இதைத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/107&oldid=1462004" இலிருந்து மீள்விக்கப்பட்டது