பக்கம்:அரை மனிதன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அரை மனிதன்



தனி ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். அந்த 'லாக்கப்பில்' என்னை அவர்கள் போட்டு அடைத்து வைக்கவில்லை. நான் வெளியே அங்கும் இங்கும் உலவ விட்டார்கள் நான் நொண்டியாதலால்.

என் பழைய கூட்டம் அங்கு மாறிமாறி வந்து இடம் அடைத்துக் கொண்டார்கள். மருத்துவமனையில் நோயாளிகள் குவிவதைப் போல அங்கே வந்து குவிந்தார்கள்.

குறவன் ஒருவன் இருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

"நீ ஏன் என்ன செய்தாய்?"

"திருடியதாகச் சொல்கிறார்கள்"

"அப்பொழுது நீ திருடவில்லையா?”

"திருடு என்றால் யாருக்கும் தெரியாமல் எடுப்பது. நான் எடுக்கும் பொழுதுதான் பார்த்து விட்டார்களே. அப்பொழுது எப்படித் திருடு ஆகும்?”

"அது கொள்ளை; கொள்வது கொள்ளைதானே"

"எனக்கு வேண்டியதை எடுத்தேன். ஒரு பெட்டியை எடுத்தேன்"

"அந்தப்பெட்டி எதற்கு?"

"அதில் எனக்குத் தேவைப்படுவது பணம். அதை மட்டும்தான் எடுக்கத் திறந்தேன்."

“பின்?”

"அதற்குள் அவசரப்பட்டு விட்டார்கள். என்னை எடுக்காதபடி தடுத்துவிட்டார்கள்.”

"இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்?"

"எனக்கு என்ன தெரியும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/112&oldid=1462009" இலிருந்து மீள்விக்கப்பட்டது