பக்கம்:அரை மனிதன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அரை மனிதன்


 “ஏன் என் தம்பியை அழைத்து வந்தாய்?”

“மறந்து விட்டீர்கள்; வாடிக்கைக்காரர் ஒருவரைத் தானே அழைத்து வரச் சொன்னிர்கள். அதனால்தான் அழைத்து வந்தேன்.”

“மாஜிஸ்ட்ரேட்டு?”

“அவர் திருந்திவிட்டார்.”

“அன்று என்னைக் கோர்ட்டில் பார்த்த பிறகு அவர் மாறி விட்டார். அன்று நான் குற்றவாளியாகக் கூண்டில் இல்லை. அவர்தான் குற்றவாளிக் கூண்டில் நின்றார். "பார்த்தால் நல்லவராக இருக்கின்றீர். நீங்கள் இந்தத் தவறு இனிமேல் செய்ய வேண்டாம்!” என்று நான் அவருக்குச் சொல்லவில்லை. அவர் மனச்சான்று அவருக்கு அவ்வாறு கூறிவிட்டது. அவர் அதற்குப் பின் அந்தப் பக்கம் சென்றது இல்லை. அவரை எப்படி மறுபடியும் நான் சந்திப்பது. எங்கே சந்திப்பது. வீட்டில் சந்திக்க முடியாது. கோர்ட்டில் சந்திக்க முடியாது. அவர் ஒடும் கரை நான் நிறுத்த முடியாது. மறுபடியும் அவர் என்னைப் பார்க்க விரும்பவில்லை. என்னால் அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.”


“அடுத்தது நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய மனிதர் உங்கள் தம்பிதான். அவரைத்தான் அழைத்து வர முடிந்தது.” என்றாள்.

“எனக்கு என் தம்பி ஜாமீன் கொடுக்க வந்திருக்கிறான் அல்லவா?”

“கேசு வாப்பஸ் வாங்க வந்திருக்கிறார்.”

“அப்படியானால் யார் திருடியது”

“கேசு வாப்பஸ் வாங்கிவிட்ட பிறகு இந்தக் கேள்வி எழுவதற்கு நியாயமே இல்லை.”

“அவனுக்கு வாப்பஸ் வாங்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அது அவன் மனைவி செய்யவேண்டியது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/116&oldid=1462012" இலிருந்து மீள்விக்கப்பட்டது