பக்கம்:அரை மனிதன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அரை மனிதன்


 “இந்த ஏழைகள் கையில் அது இருந்தால் அதை வைத்துக் காப்பாற்ற முடியாது என்பதால்தான்.”

அம்மாகண்ணு நாகரிகம் தெரிந்தவள். நாங்கள் பேசும் பொழுது அவள் அங்கே இல்லை; வெளியே எனக்காகக் காத்துக் கிடந்தாள்.

“அது எப்படி உன் கையில் வந்தது?”

“இதே கேள்வியைத்தான் சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார். நீ கேட்பது எந்த அடிப்படையில்?”

“யார் உன்னிடம் கொடுத்தார்கள்?”

“நீ யாரிடம் கொடுத்தாய்?”

அவன் தலை குனிந்தான்.

“இது யார் சம்பாதித்தது? அம்மா சீட்டு நாட்டு கட்டிச் சேர்த்து அவள் மருமகளுக்கு வாங்கித் தந்தது. அதை நீ அம்மாகண்ணுகளுக்குக் கொடுப்பதற்காக அல்ல.”

அதற்குள் என் பழைய நண்பர் சுமைதாங்கி என்னைத் தேடிக்கொண்டு வந்தார். நான் 'லாக்காப்பில்’ இருப்பதை யாரோ கேட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.

“என்னப்பா உனக்கு ஏன் இந்த நிலைமை. நீயா திருடினாய்? நான் நம்பமாட்டேன்.”

“நம்பித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. இல்லா விட்டால் என் தம்பி திருந்தமாட்டான். நான் கெட்டு விடுவேனே என்று நினைத்து என் கன்னத்தில் ஓங்கி அறை கொடுத்தான். அவனுக்கு அந்த உரிமை இருந்தது. இப்பொழுது இவன் கெட்டுவிட்டானே அதற்கு நான் என்ன செய்யவேண்டும். நானும் ஓங்கி அறை விடுவதுதானே நியாயம். எங்கள் வீட்டுச் சொத்தை இவன் திருடி யாரோ நடைவாசிக்குத் தருகிறான் என்றால் என்ன அர்த்தம். அவன் உயர்ந்து விட்டான். நான் அடிக்க முடியாது. அவன் என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/118&oldid=1462014" இலிருந்து மீள்விக்கப்பட்டது