பக்கம்:அரை மனிதன்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

117


 அடித்தான். அதனால் தாழ்ந்து விடவில்லை. நான் மிகவும் உயர்ந்துவிட்டேன். அடுத்து போலீசுகாரன் என்னை அடித்தான். இயேசுவாக உயர்த்தப்பட்டேன். அதற்கு அப்புறம் அம்மா அடித்தார்கள். அதற்கு மேல் நான் உயர இடமில்லை.”

“என் காலை எதற்காக இழந்தேன் தெரியுமா? இவனை ஒடோடிக் காப்பாற்றுவதற்காக. அந்தச் சக்கரத்தில் அவன் அகப்பட்டு உயிர் விட்டு இருப்பான். அந்த அவலக் காட்சியை என் கால் தடுத்துக் காப்பாற்றியது. பிறகு என் உழைப்பால் உயர்ந்தான். பிறகு மறந்தான். அதற்கு அப்புறம் அவன் உயர்வான் என்று பார்த்தேன். அவன் உயரவில்லை. அவன் படித்த மேல்நாட்டுப் படிப்பு: ஆங்கிலப் படிப்பு.”

“எந்தக் கார் என்மீது ஏறியதோ, அதிலேயே அவன் ஏறினான். அப்பொழுதே அவன் ஒரு முதலாளி என்பதைக் காட்டிவிட்டான். ஏழையின் உழைப்பில் உயர்பவன், அவன் மீது சவாரி செய்பவன்தான் முதலாளி. அந்த மனோபாவம்தான் இவனுக்கு வந்துவிட்டது.”

“அதற்குமேல் அவன் மேல்நிலைக்குச் சென்றான். அவர்களிடத்தில் உள்ள கெட்ட பழக்கங்களுக்கு இரையாகி விட்டான். அதன் அடிப்படை சுயநலம். எல்லாம் தமக்கே வேண்டும் என்ற தத்துவத்தின் வாரிசுக்காரர்கள் அவர்கள். அவர்களோடு சேர்ந்து விட்டான்.”

“இந்தக் குடும்பத்தை அடியோடு மறந்துவிட்டான். இவனுக்காக என் அப்பா எவ்வளவு உழைத்து இருப்பார்கள். அம்மா இவனுக்காக எவ்வளவு எடுத்து இருப்பார்கள். இந்தக் குடும்பத்தின் சுகதுக்கங்களை மறந்து விட்டான். குடும்பச் சுமையை என்மேல் போட்டுவிட்டான். நானே எனக்குச் சுமையாக இருக்கும் பொழுது நான் எப்படி இந்தச் சுமையைத் தாங்க முடியும்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/119&oldid=1154625" இருந்து மீள்விக்கப்பட்டது