பக்கம்:அரை மனிதன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அரை மனிதன்



வில்லை. அது அவர்களுடையது தான் என்று சொல்லி விட்டாள். அவள் வழக்கை வாப்பஸ் பெற்று விட்டாள்.

அந்த நகை என் அம்மா வாங்கிக் கொண்டாள். எனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. அதை அவள் தான் கழுத்தில் போட்டுக் கொள்ளப் போகிறாள் என்று எதிர்பார்த்தேன். குந்திதேவி தன் சேலையை உடுத்திக் கொண்டு அழகாகக் காட்சி அளிக்கப் போகிறாள் என்று எதிர்பார்த்தேன்.

அங்கேயே அம்மாகண்ணுவைக் கூப்பிட்டாள்.

"இங்கே வா" என்றாள். எல்லோரும் விழித்த கண் மூடாமல் அம்மாகண்ணுவையும் அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் யார் என்பதே என் தங்கையின் கேள்வி. அவள் புருஷனுக்கும் அவள் ஒரு புதிராக இருந்தாள்.

"இந்தா இதை உன் கழுத்தில் மாட்டிக் கொள்" என்று சொல்லி அம்மாவே அதை அவள் கழுத்தில் மாட்டினாள்.

"இது கலியாணப் பரிசு" என்று முடித்தாள்.

எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

"இது யார் இந்த அக்காள்?" என்று அவளை என் தங்கை கேட்டாள். "நீ தான் சொல்லி விட்டாயே. அவள் உன் உடன் பிறவாச் சகோதரி. அவள் உன் அண்ணனின் அன்புத் தங்கை" என்றேன். எல்லோரும் வெளியேறினோம்.

அம்மாகண்ணுவை என் தாயார் உடன் அழைத்துச் சென்று விட்டாள். நானும் என் நண்பர் சுமைதாங்கியும் உடன் விடப்பட்டோம்.

"உன் தம்பியை நீ காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்"

அப்புறம் மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். அவன் என் தம்பி. அவன் அவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/129&oldid=1462029" இலிருந்து மீள்விக்கப்பட்டது