பக்கம்:அரை மனிதன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அரை மனிதன்


 என்னை "வாத்தியார்' என்று கவுரவமாக அழைத்தார்கள். அதாவது நல்லது செய்பவன் என்பது அந்தச் சொல்லுக்கு அர்த்தம். இது அவர்கள் அகராதி. எதிரிகளை அஞ்சாமல் தாக்குபவன் என்பது அந்தச் சொல்லுக்குத் தனிப்பொருள். எளியவர்களைக் காப்பவன் என்பது இந்தச் சொல்லுக்கு அர்த்தம் இருந்தது. அதே சமயத்தில் சம அந்தஸ்தில் வைத்துப் பேசப் பயன்படும் சொல்லாக இது இருந்தது. 'என்னா வாத்தியாரே என்ன சொல்றே' என்றுதான் கேட்பார்கள்.

அவன் அடித்ததை என் சிஷ்யன் ஒருவன் பார்த்து விட்டான். அவன் என் தம்பி என்பது அவனுக்கு எப்படித் தெரியும். அந்தக் கார்போகும்போது அவன் அடித்த கல் குறி தவறிவிட்டது.

"தப்பித்துக் கொண்டான்" என்று அவன் தோல்வியை என்னிடம் சொன்னான்.

அவனிடம் என் தம்பி என்று சொல்வதா இல்லையா என்று கொஞ்சம் நேரம் யோசனை செய்தேன். அப்புறம் அவர்களோடு ஒன்றாகப் பழக முடியாது. தம்பியால் வருகின்ற பெருமை எனக்குத் தேவை இல்லை என்பது உணர்ந்தேன்.

"அவன் என்னோடு படித்தவன்" என்று சமாளித்துக் கொண்டேன்.

"என்ன அண்ணே, உன்னோடு படித்தவன் என்கிறே. அவன் நிலைமை உன் நிலைமை.”

"அதுதான் இந்த நாட்டு நிலைமை. பள்ளியிலே படிக்கும் வரை வித்தியாசம் இருப்பது இல்லை. அப்புறம்தான் வித்தியாசமே ஆரம்பிக்குது. இப்பொழுது சில பள்ளிகளில் சீருடை என்று வைத்திருக்கிறார்களே அது தெரியுமா? அதைப் பார்த்திருக்கிறாயா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/18&oldid=1461925" இலிருந்து மீள்விக்கப்பட்டது