பக்கம்:அரை மனிதன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அரை மனிதன்



என்ற செய்தியைச் சுவைபடப் பேசினார். அது எனக்கு வியப்பைத் தந்தது.

“யார் அவன்?” என்று கேட்டார்.

"எல்லோரும் நம் உடன் பிறப்பாளிகள் தாம்' என்றேன்.

‘அப்ப ஒவ்வொருத்தனிடமும் அடி வாங்க வேண்டியது தான்’ என்றார்.

"இயேசு நாதர் சொல்லியிருக்கிறார். ஒரு கன்னத்தில் அடித்தால் நீ மறு கன்னத்தையும் காட்டு. அதைத்தான் செய்து காட்டினேன்' என்று கூறினேன்.

“ஆமாம், நீ ஏன் இந்த பிளாட்பாரத்துக்கு வந்து விட்டாய்?” என்று கேட்டார்.

"என்னைப் போல் நடைவாசிகள் நிறைய இருக்கிறார் களே அவர்களை எல்லாம் கேட்பது இல்லையே?

"புதிதாக யார் வந்தாலும் இப்படித்தான் விசாரிக்கத் தோன்றும். அப்புறம் யார் உன்னைப் பற்றி விசாரிக்கப் போகி றார்கள். ஆமாம் உன் கால்

‘’கால் போனதால்தான் நான் இப்பொழுது அரை மனிதனாக இருக்கிறேன்'

'அப்படி என்றால்?"

‘முழு மனிதனாக ஆக முடியவில்லை. உழைக்க முடியா ததால் பிழைக்க முடியவில்லை’

‘’கால் என்ன ஆயிற்று?”

“அது பறிபோய் விட்டது”

"அப்படி என்றால்?”

‘அதாவது ஆக்சிடெண்டு’

‘ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாமே’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/22&oldid=1461930" இலிருந்து மீள்விக்கப்பட்டது