பக்கம்:அரை மனிதன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

21


 'அச்சுத் தொழில் எங்கள் வீட்டுத் தொழில். அதுவும் கடனால் நசிந்து விட்டது. மிச்சம் மீதி எதுவும் இல்லை.”

"உனக்குக் கால் இல்லையே! நீ கடன் கேட்டால் அர சாங்கம் கொடுப்பார்களே. உனக்கு ஏற்கெனவே நடத்திய தொழில் தெரியும். அதை வைத்துக் கொள். அப்பாவையும் வைத்து அழகாகத் தொழில் நடத்தலாமே.”

அவர் சொன்னது எனக்குப் புதுச் செய்தியாக இருந்தது. பலபேர் சொல்லி இருக்கிறார்கள். வழிதான் தெரியவில்லை. நாட்டிலே தொழில் தெரிந்தவர்களுக்குக் கடனுதவி தருகி றார்கள். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

'உன்னைப் பார்த்தால் இங்கு வரத் தகுதியில்லை என்று தெரிகிறதே'

"எங்கேயும் எனக்குத் தகுதி இல்லை. அப்படித்தான் நினைக்கிறார்கள்...'

'உனக்கென்னப்பா நீ என்ன படித்துவிட்டா இருக்கிறாய கவலைப்படுவதற்கு அவர்களுக்குதான் இந்த நாட்டில் வேலையில்லை. உனக்கு என்ன? கால் போனது உனக்கு அதிருஷ்டம். எல்லோரும் உதவி செய்வார்கள்' என்று சொன்னார்.

நான் எப்போதும் என் துரதிஷ்டத்தைக் கண்டு அதிகம் வருத்தப்படுவதில்லை. ஆனால் அந்த இடத்தை விட்டு வருவ தற்கு எனக்கு விருப்பம் ஏற்படவில்லை. என்னமோ அந்தச் சூழ்நிலை பிடித்து விட்டது.

'இன்றைக்குப் பேப்பர் படித்தாயா?”

அவர் தவறாமல் பேப்பர் படிப்பது வழக்கம்.

'இந்த ஊழல் ஊழலென்று அனாவசியமாக எல்லா ரையும் பிடித்துப் போடுகிறார்களே அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/23&oldid=1461931" இலிருந்து மீள்விக்கப்பட்டது