பக்கம்:அரை மனிதன்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

23


 "எப்படி மாற வேண்டும்' என்று கேட்டேன்.

'தலைகீழாக மாற வேண்டும்.'

'அப்படி என்றால்’’

'தலைகால் தெரியாமல் நடக்கக்கூடாது. ஒழுங்காக இயங்க வேண்டும்.'

அதற்குமேல் அவரால் விளக்க முடியவில்லை.

"ஆமாம் நீங்கள் ஒரு சங்கம் அமைத்துக் கொள்ள வேண்டும்' என்றேன்.

"ஏன் நீ எங்கள் சங்கத்துக்குத் தலைவராக இருக்கவேண் டுமென்று ஆசைப்படுகிறாயா?"

ஏன், இந்த நாட்டுக்கே தலைவனாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன். அதற்கொன்றும் அவ்வளவு கஷ்ட மில்லை. ஆனால் தலைமைப்பதவியைக் காப்பாற்றிக் கொள்வதுதான் கஷ்டம்' என்றேன்.

'நல்லது செய்தால் தானாகத் தலைவனாக ஆக முடியும்.'

'அதுசரிதான் நாட்டுக்கு நல்லது செய்தால் அது முடியும்.'

'பின் வீட்டுக்கா செய்வார்கள்?'

'அப்படிச் செய்தவர்களுக்கு இன்று நாட்டிலே இட மில்லை.'

'இந்தச் சுமைதாங்கி வேலை கஷ்டமாக இல்லையா?”

'ஏம்'பா! யாருமே இப்படி என்னைக் கூப்பிட்ட தில்லை. போர்ட்டர் என்றுதானே கூப்பிடுகிறார்கள்.”

'தமிழிலே சிலர் "கூலி' என்று கூப்பிடுகிறார்கள். அதை விட நான் சொல்வது நன்றாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/25&oldid=1150720" இருந்து மீள்விக்கப்பட்டது