பக்கம்:அரை மனிதன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அரை மனிதன்


 "எங்களைப் பார்க்கும்பொழுது அவர்களுக்கு அந்தக் கூலிதான் நினைவுக்கு வருகிறது. அதனால்தான் அவர்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். அது இந்த நாட்டில் மனிதனை மதிப்பிடும் நல்லமுறை.”

"என் கண்ணுக்கு உன் சுமைதான் நினைவுக்கு வருகிறது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.”

"போர்ட்டர் என்றால்’’

'அதற்கும் சுமைதாங்கி என்றுதான் பொருள். அவன் தொழிலால் அழைக்கின்றான். இவன் தான் கொடுக்கின்ற கூலியைக் கொண்டு அழைக்கின்றான். இது இந்த நாட்டின் மனோபாவம். மனிதனை மனிதனாக மதிக்காத சமுதாயத்தின் பார்வை இப்படித்தான் இருக்கும்' என்றேன்.

'கஷ்டப்படாமல் யார் வாழ முடிகிறது?"

'கஷ்டப்படலாம். ஆனால் அவமதிப்பை எப்படித் தாங்கி கொள்ள முடியும்.'

'இந்தப் பயணிகள் மதிப்பு யாருக்கு வேண்டும். அவர்கள் கூலி என்று அழைக்கிறார்களே. அந்தக் கூலி யையே சரியாகக் கொடுத்தால் போதும். அந்த வேலை கிடைத்தால் போதும்.”

'அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வராதா?”

'இந்த ஒரு தொழிலில்தான் அந்த ஆசை கிடையாது. சுமந்தால்தானே கூலி. ஆனால் நாங்கள் சேர்த்து வைப்போம்” என்று தன் வாழ்க்கையின் அடிப்படையை விளக்கினார். மேலும் தொடர்ந்தார்.

"நாங்கள் கிராமங்களிலிருந்து குடியேறியவர்கள். படிப்பு அதிகமாகப் படிக்கவில்லை. அங்கே விவசாயம் செய்து அலுத்துவிட்டவர்கள். அதனால் எந்தப் பயனும் காண -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/26&oldid=1461934" இலிருந்து மீள்விக்கப்பட்டது