பக்கம்:அரை மனிதன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

25



வில்லை காசு சம்பாதிப்பதற்கு நாங்கள் வேறு என்ன தொழில் கற்றிருக்கிறோம். மூட்டை தூக்க யாரும் கற்றுத் தர வேண்டியது இல்லை. வாழ்க்கையே சுமை என்று சொல்வார்கள். அதில் உழல்கின்ற எங்களுக்கு மூட்டை தூக்குவது சுமையாகத் தெரியவில்லை. நறுக்கென்று நாலு காசு சம்பாதிக்க முடிகிறது. ஆரம்பத்தில் இங்கே இடம் பிடிக்கிறது. கொஞ்சம் கஷ்டம். அதுக்குக்கூட இப்போது கொஞ்சம் அதிகம் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் 'பில்லை” வாங்க. அதை வாங்கிவிட்டால் அப்புறம் எந்தக் கவலையும் இல்லை.”

'உம் பிள்ளைகளை இந்தத் தொழிலுக்கு விடுவீர்களா?”

'நீ என்னப்பா குமுதம் ஆசிரியர் பேட்டி காண்பது போலக் கேட்கிறாயே, இப்பதான் வருணாசிரம தர்மமே மறைந்து விடுகிறது. அவனவன் தன் தொழிலைத் தவிர மற்றவர் தொழிலைக் கவனிக்கிறான். அவனவன் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து முன்னுக்கு வருகிறான். நீ போய்.”

'எந்தச் சுமைதாங்கியும் தன் பிள்ளையை அந்தத் தொழி லுக்கு அனுப்பமாட்டான் அல்லவா?”

'அப்படி முழுவதும் சொல்லவும் முடியாது. வேறு எதுக்கும் உதவாத பிள்ளையை உருப்படியாக ஏதாவது தொழிலிலே விட வேண்டும் என்றால் இதுதானே கிடைக்கிறது.'

'உங்களுக்கும் சீருடை கொடுத்திருக்கிறார்களே”

'இந்த முரட்டுச் சட்டை அழுக்குப் படியாமல் இருக்க, சிகப்பு: போகிறவர்களை நிறுத்தி வைக்க'

“Red Signal என்று சொல்”

இதைச் சொல்லும்போது மறுபடியும் அந்தச் சிகப்பு நிறம் நினைவுக்கு வந்தது. அந்தச் சிவப்புத் துணி மறுபடியும் இந்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/27&oldid=1461935" இலிருந்து மீள்விக்கப்பட்டது