பக்கம்:அரை மனிதன்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அரை மனிதன்


 அவள் தன் அனுபவங்களில் சிலவற்றை மட்டும் சொன்னாள். அதிகம் சொல்லி இருப்பாள். நான் அவளை விரும்பவேண்டும் என்ற அக்கரை அவளுக்கு இருந்தது.

'நீ என்னைக் காதலிக்க முடியுமா?' என்று துணிந்து கேட்டேன்.

'நீ அந்த விடுதிக்கு வந்திருந்தால் இந்த வார்த்தையைச் சுலபமாகச் சொல்லி இருப்பேன். அங்கே அப்படித்தான் சொல்ல வேண்டும்” என்றாள்.

"அப்பொழுது நீ'

"அதை வெறுத்துத்தானே வெளியேறி விட்டேன். அது ஒரு அனுபவம். ஒரு அனுபவத்தைப் பெற்ற பிறகு மறுபடியும் அதைப் பெறநான் விரும்பவில்லை'.

சிலபேர் அனுபவத்தையே முதலீடாக வைத்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். திறமை இல்லாவிட்டாலும் அனுபவசாலிகளும் தொழிலில் உயர்வு கிடைக்கிறது. இந்த ஒருஇடத்தில் மட்டும் அனுபவசாலிக்கு மதிப்பு இல்லாததை உணர்ந்தேன்.

எங்கள் அப்பா அச்சுத் தொழில் நடத்தும்போது ஒரு சில ஆசிரியர்கள் புத்தகம் அச்சிட எடுத்து வருவார்கள். அவர்கள் சொல்லுவார்கள் தாம் முப்பத்தைந்து வருடம் ஒரே தொழில் நடத்துவதாகவும், தனக்கு மிஞ்சி யாரும் இல்லை என்றும் சொல்லிக் கொள்வார்கள். அதைவிட சில அனுபவசாலிகள் இருக்கிறார்கள். வயதானாலும் வேலையை விடமாட்டார்கள். அவர்களுக்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை ஏற்படுவதில்லை.

அவர்களைப்போல் பேசாமல் அந்த அனுபவத்தையே வெறுக்கிற புத்திசாலியாக அவள் காணப்பட்டாள்.

"அப்படியானால் என்னை'

'உனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். நீ ஒருவன்தான் என்னை 'மா' என்று மதிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/34&oldid=1150734" இருந்து மீள்விக்கப்பட்டது