பக்கம்:அரை மனிதன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

33


 வைத்து அழைத்தாய். இங்கே மற்றவர்கள் எல்லாம் என்னை ஆடு மேய்த்தார்கள். அவர்கள் பார்வையில் நான் வேறு; உங்களுக்கு நான் வாழ்க்கை நண்பர். அதாவது உங்களை எனக்கு வேண்டிய ஒருவராக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு வேண்டியது இல்லை' என்றாள்.

என் தங்கையைப் பிரிந்த பிரிவை அவள் சரிப்படுத்திவிட்டாள். இந்தப் பரந்த உலகில் தம்பியர்கள் இருக்கிறார்கள். தங்கைமார்களும் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

அவளைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவள் வம்புக்கு யாரும் போக மாட்டார்கள். அந்தச் சுமை தாங்கி நண்பர் இருக்கிறாரே அவர் அந்த மாதிரி பிரச்சாரம் செய்து வைத்திருக்கிறார். அந்தப் பயத்தினாலேயே அவளிடம் யாரும் நெருங்குவதில்லை. அவள் எனக்குத் தெரிந்த யாரையும் அந்த விபத்துக்குள் ஆக்கியது இல்லை.

ஒரு நாள் துணிந்து கேட்டேன். 'இப்படி சொல்லுகிறார்களே' என்றேன்,

'சொல்லட்டுமே அந்த அச்சம்தான் மற்றவர்கள் என்னை அணுகாமல் காப்பாற்றுகிறது” என்று சொன்னாள்.

கால் இல்லாத எனக்கு எவ்வளவோ உதவியாக இருந்தாள். இரண்டு தங்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அவள் பத்தாயிரம் தந்தால்தான் போவேன் என்று பிடிவாதம் செய்தாள். இவள் பத்துக்காசு கொடுத்தால்கூட என்னிட மிருந்து வாங்கமாட்டாள். அவள் காசு மட்டும் யாரிடமும் வாங்கமாட்டாள். அந்த நல்ல பழக்கம் அவளிடம் இருந்தது. அதைக் கையாலும் தொடமாட்டாள். நாஸ்தா' வாங்கித் தந்தால் போதும்; சில சமயம் அவளிடம் வேறு வழியில்லாமல் காசும் நடமாடும். அதைப் பத்திரப்படுத்த வேண்டும் என்ற அக்கரையே அவளிடம் காண முடியவில்லை.

'இப்பொழுது உன்னை உங்கள் வீட்டார் தேட மாட்டார் களா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/35&oldid=1461943" இலிருந்து மீள்விக்கப்பட்டது