பக்கம்:அரை மனிதன்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அரை மனிதன்


 'அந்த நினைவே அவர்களை விட்டு அகன்று விட்டது. அதை மாற்றுவதற்கு அவர்கள் ஒரு சடங்கையே செய்து விட்டார்கள். ஐயரைக் கூப்பிட்டுப் புண்ணியவசனம் செய்து விட்டார்களாம். அதாவது நான் அவர்களைப் பொறுத்தவரை செத்தாருள் வைக்கப்பட்டு விட்டேன். அதாவது என் நினைவே அவர்களுக்கு வரக்கூடாது என்பது அவர்கள் எண்ணம்.'

என் உடன்பிறந்த தங்கையைப் பற்றி மட்டும் எனக்கு எங்கே எண்ணம் வருகிறது. ஆனால் மறைந்துவிடும். எனக்குத் தங்கை இருக்கிறாள் என்று நினைக்கும்பொழுது அவளுக்காக ஒரு கால் என்ன இரண்டு கால்கைளயும் இழக்கத் தயார். அவனுக்கு உழைத்ததைவிட அவளுக்குக் கொடுத்ததில் எங்களுக்கு ஒரு மனநிறைவு இருக்கிறது. என் தாய்க்கு அவள்தானே ஆதரவு வந்தவள், தம்பிக்கு ஆதரவு நிச்சயம். அவன் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனை அப்படியே விடுவதால் பயன் இல்லை. என் தங்கையை வைத்தாவது அவன் காப்பாற்றட்டுமே.

அப்பா ஒரு அச்சுத் தொழிலாளியாம். மிகவும் கேவல மாக நினைக்கிறான். அவ்வாறு அவள் அவனை நினைக்கும்படி செய்து விட்டாள்.

ஒருநாள் அவர் வயிற்று வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். நான்தான் நொண்டியாகி விட்டேன். எப்படி அவருக்கு ஒடி ஆடி உதவி செய்ய முடியும். யாரோ அவனுக்குப் போன் செய்தார்களாம். அவர் போய்விடுவார் என்று சொன்னார்களாம். மகன் கடமை என்ன என்பதை அவன் நன்கு உணர்ந்தவன். 'கொள்ளி வைக்க ஒரு புள்ளை வேண்டும்' என்ற பழமொழி தோன்றிய நாட்டில் அவன் தன் கடமையை உணராமலா இருப்பான். அவன் காரில் வேகமாக வந்தான். மருத்துவ மனைக்கு அழைத்துப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/36&oldid=1152925" இருந்து மீள்விக்கப்பட்டது