பக்கம்:அரை மனிதன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அரை மனிதன்


3

இந்தச் சுதந்திர வாழ்க்கையில் நாங்கள் காண்பது போராட்டம்தான், என்றாலும் போராட்டத்தில்தான் வாழ்க்கையைக் காண முடிகிறது. எங்கள் உடல் மழையிலும் வெய்யிலும் பட்டு உரம் ஏறிவிட்டது. காற்றுக்கும் மழைக்கும் நாங்கள் அஞ்சுவதில்லை. 'இயற்கை அன்னை' என்று சொல்லுவார்கள். அவர்கள் அன்னையைக் கண்டிருக்கலாம்.இயற்கையை எங்கே கண்டிருக்கப் போகிறார்கள். கூட்டம் கூட்டமாகக் காக்கைகள் வாழ்வதைப் போலத்தான் என்று கற்பனை நயம்பட எழுதுவார்கள் எங்கள் அச்சகத்தில் வெளியான நூல்களில். அதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். எங்கே வேண்டுமானலும் கூடு கட்டுவோம்; உடனே வந்து பிரித்துப் போடுவார்கள்.

போலீசுக்காரர்களுக்கு எந்தக் கேசும் கிடைக்காவிட்டால் யாரையாவது கூப்பிடுவார்கள். அவர்கள் உதவிக்காக எங்களில் ஒரு சிலர் உள்ளே இருந்துவிட்டு வருவதும் உண்டு. 'நொண்டி' அதனால் என்னைத் தொட விரும்புவதில்லை. என் தங்கை 'மா'வுக்கு உதவியாக நான் இருக்கவேண்டிய சூழ்நிலை தானாக அமைந்துவிட்டது.

அப்படியும் அவளைச் சுற்றி 'அவன்', 'இவன்' வட்டமிடுவார்கள். என் பக்கத்தில் காலாக நீட்டிக் கிடக்கும் கட்டைகளுக்கு அஞ்சிக் கொஞ்சம் எட்டவே இருப்பார்கள். அவள் சொல்லுவாள். "என் பழைய வரலாற்றை அறிந்திருக்கிறார்கள். நான் விரைவில் இணங்கி விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுதான் நடக்காது. பெண்ணுக்குத் துணை கணவனாவது இருக்க வேண்டும்; உடன்பிறந்த சகோதரனாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில்தான் காப்பு இல்லாமல் போய்விடுகிறது."

"எனக்கு உடன்பிறந்த சகோதரன் இருந்திருந்தால் நான் வெளியே வந்திருக்க மாட்டேன். பொதுவாக அந்த மாதிரிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/46&oldid=1461954" இலிருந்து மீள்விக்கப்பட்டது