பக்கம்:அரை மனிதன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அரை மனிதன்


 மனநிலையில் இருப்பாள். அப்பொழுது எல்லாம் அந்தக் கம்சலையை நினைத்துக் கொள்வேன் அவளும் இப்படித்தானே பைத்தியமாகத் திரிந்து இருப்பாள். 'அரங்கேற்றம்’ படம் பார்த்தாயா! அதில் அவள்தான் தம்பிக்காக உதவினாள். வாழ்க்கையில் அரங்கேறினாள். பெற்ற தாயும் கற்ற தந்தையும் உற்ற உறவினரும் அவளைத் தீண்டாதவளாக ஒதுக்கி விட்டார்கள். அவள் எங்கெங்கோ சுற்றினாள். கொஞ்சம் தவறு செய்தால் இந்தச் சமுதாயம் விடாது. அதுவும் பெண் தவறு செய்து விட்டால் அவளைச் சாகும் வரை வாழவிடாது. உடல் சாவுதான் இறப்பு என்றால் மனத்தின் சாவுதான் பைத்தியம். அந்தப் பைத்தியம் இங்குதான் சுற்றிக் கொண்டு இருக்கும். அவளோடு சித்தப் பிரமை பிடித்த 'ஆள்' ஒருவனையும் நீ பார்த்திருக்கலாம். அவன் பீடிக்கு நெருப்புக் கேட்பான். அவ்வளவுதான். அதற்கு அப்பால் அவனைப் பற்றி இந்தச் சமுதாயத்துக்குத் தெரியாது; தெரிந்து கொள்ள முயல்வதும் இல்லை. அவன் மனமும் செத்துவிட்டது. அவர்கள் எல்லாம் வெறும் நிழல்களாக இங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள்."

"இவர்கள், எல்லாம் மனசால் செத்தவர்கள். பலர் உணர்வே அற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள். எதிலும் ஆசை இருப்பது இல்லை. இங்கே கிழம் ஒன்று சுற்றிக் கொண்டு இருக்கும். அதுக்கு ஒரே ஆசை காசு கேட்பது. வேறு எந்த நல்ல உணர்வும் கிடையாது. யாரும் அதிகம் கொடுக்க மாட்டார்கள். கிடைப்பதை ஒளித்து வைக்கும். அதை யாராவது அடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அதற்கப்புறம் 'லபோ திபோ' என்று அடித்துக் கொள்ளும்."

"அவர்கள் எல்லாரையும் பார்த்திருக்கிறேன். அவர்களுள் ஒருத்தியாகத்தான் நான் இங்கே சுற்றிக் கொண்டு இருக்கிறேன். அந்த மாஜிஸ்ட்ரேட்டு என்னை தண்டித்து 'ஹோமுக்கு' அனுப்பியிருந்தால் நான் உருப்பட்டு இருப்பேன். என்னைப்போல் வழுக்கி விழுந்தவர்கள் எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/48&oldid=1461956" இலிருந்து மீள்விக்கப்பட்டது