பக்கம்:அரை மனிதன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

'அரை மனிதன்' இது இங்கு வரையப்பட்ட சித்திரம். அவன் உதிரிகளின் வாழ்க்கையில் தொடர்பு பெறுகிறான். அவர்களிடம் உள்ள உயர்ந்த பண்புகளைக் காட்டுவது இப் புதினம்.

பாத்திரப் படைப்பில் இது சிறந்து விளங்குகிறது. 'அம்மா கண்ணு' இது உருவகப் பாத்திரம். 'ஆம்படையானைத் தேடி' அவள் வீட்டைவிட்டு வெளியே வருகிறாள். அதில் அவள் வெற்றி பெறுகிறாள்.

இளைஞர்கள், படித்தவர்கள் பிறந்த குடும்பத்தை மறக்கிறார்கள். அவர்கள் மேல்நிலை எது என்று நினைக்கிறார்கள்? மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலை என்ற மூன்று நிலைகளைப் பிரித்துக் காட்டுகிறது. 'இனம்' வேறுபடுகிறது. 'மத்திய வர்க்கம்' அவர்கள் நிலை இதில் சித்திரிக்கப்படுகிறது.

கருத்து மிக்க கதை; அர்த்தமுள்ள செய்திகள்; கதைக்கு வேண்டிய கரு, சிக்கல்கள், தீர்வு இவை அழகாகக் கட்டப்பட்டுள்ளன. தோய்வில்லாமல் இயங்குகிறது. அழகிய படைப்பு என்பதில் பெருமை கொள்கிறேன்.

- ரா. சீனிவாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/5&oldid=1461929" இலிருந்து மீள்விக்கப்பட்டது