பக்கம்:அரை மனிதன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அரை மனிதன்


 அவளை விட்டு நான் எப்படி ஒட முடியும். அப்படியும் அப்பாவின் நிலைமை எனக்குப் புரிகிறது. சுமைதாங்கி நண்பர் சொல்லியதுபோல் தொழில் நடத்தவும் முயன்றேன். சொத்து இருந்தால்தான் நம்பி கடன் கொடுப்பார்களாம்; அல்லது சொத்து இருப்பவர்கள் ஜாமீன் கொடுத்தால்போதும் என்று சொன்னார். மறுபடியும் என் தம்பியைக் கேட்க அப்பாவுக்கு விருப்பம் இல்லை. அம்மா அவன் நன்றாக இருந்தால்போதும் என்றார்கள். 'தங்கை' அவள் தன் கணவனின் அடிமை. அவ்வளவுதானே அவன் எதிர்பார்த்தது. அதற்காகத்தானே அவளுக்குத் திருமணமே நடந்தது. அந்த ஒரு குடும்பத்தைச் சரிப்படுத்தி முடியுமானால் அதை விருத்தி செய்து அதிலேயே சுற்றிச் சுழல்வதுதானே பெண்ணின் லட்சியம். அதை அவள் செம்மையாக நிறைவேற்றி வந்தாள்.

'காட்டராக்ட்' கண் அவர் பார்வையை மழுக்கி விட்டது. அவருக்கு நிச்சயமாகப் பண உதவி செய்ய வேண்டும். இங்கே நான் எனக்காகச் சேர்த்து வைத்தால் மற்றவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சாதாரண மனிதனாக நான் வாழ விரும்பவில்லை.

இன்றைய சராசரி மனிதன் செய்வதே இதுதானே. தனக்கு வேண்டியதைச் சம்பாதிப்பது; கொஞ்சமாகச் செலவு செய்வது; மீதி சேர்த்து வைப்பது. பிறகு இந்தச் சமுதாய சடங்குகளுக்கு மொத்தமாக ஒழித்து விடுவது. மேலும் எங்களில் யாரும் மூன்று வேளை சாப்பிட்டுப் பழகியது இல்லை. அது உடம்புக்கு கெடுதி என்பது தெரியும். அத்தகைய வாய்ப்பு எங்களுக்குக் கிடைப்பது இல்லை. அந்த நிலையில் நாங்கள் எப்படிச் சேர்க்க முடியும். கொஞ்சமாகக் காசு நடமாடினால் சூதாடித் தோற்று விடுவார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது. எங்களுக்குள் பணப்புழக்கம் ஏற்படும். பொழுதும் போவதற்கு வழி ஏற்பட்டு விடுகிறது. பெரிய மனிதர்களிடம் இருக்கும் இந்த நல்ல பழக்கங்களே அங்குப் பலரிடம் காண முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/50&oldid=1461958" இலிருந்து மீள்விக்கப்பட்டது