பக்கம்:அரை மனிதன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அரை மனிதன்



அவளுக்குப் பழகிவிட்ட தொழில்; அதை அவள் விட முடியவில்லை. அதனால்தான் அவளை வெறுக்கவில்லை. என் மனம் அந்த வகையில் மிகவும் பண்பட்டு விட்டது. நான் அவளைக் காதலிக்கவில்லை. அது அதைவிட ஒரு பெரிய உண்மை; ஆனால் அவள் எனக்காக வாழ்ந்தாள். என் உறவை விரும்பினாள். ஆனால் என்னை விரும்பவில்லை.

இன்னும் சொல்லப் போனால் உடலால் நினைக்காமல் உள்ளத்தால் ஒன்றுபடும்படி ஏதாவது சொல் இருந்தால் அது இதுதான். அதைச் சாதாரண அன்பு என்று என்னால் சொல்ல முடியாது. இந்த உடல்தான் எங்களுக்குத் தடை இல்லா விட்டால் நாங்கள் எங்களைக் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டால் தவறு இல்லை என்று நினைக்கிறேன். அவள் எனக்காக வாழ்கிறாள். நான் இந்தச் சமூகத்துக்காக வாழ்கிறேன். அந்தச் சமுதாயத்தில் என் தம்பி ஓர் அங்கம். என் அப்பா ஒர் அங்கம். அவன் சுரண்டும் இனத்தில் சேர்ந்து விட்டான். அப்பா சுரண்டப்பட்ட இனத்தில் ஒருவர். நான் இரண்டும் கெட்ட நிலையில் ஒர் உதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு அழகான பெயர் இந்தச் சமுதாயம் தந்திருப்பது ’நொண்டி’. அப்படி என்றால் எதுக்கும் உதவாதவன்; உணர்ந்திருக்கிறது. இரண்டும் அல்லாத இனம்தான் இந்த ’உதிரிகள்’ இவர்களைப் பற்றி யாரும் எண்ணிப் பார்த்தது இல்லை. அவர்களுள் ஒருவனாக நான் தள்ளப்பட்டு விட்ட பிறகுதான் அவர்கள் யார் என்ன செய்கிறார்கள். இந்த நாட்டின் எதிர்காலம் என்ன என்பதைப் பற்றி எண்ணத் தூண்டியது. - முதலாவதாக இவர்களுக்கு வாக்குரிமை இல்லை. அதனால் இவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அந்தப் பொறுப்பைச் சமுதாயம் அளிக்க மறந்து விட்டது. இவர்களுக்கு முகவரியே இல்லை. முகவரியை அமைத்துக் கொடுக்க இந்தச் சமுதாயம் மறுத்து விட்டது. மிக எளிதில் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/52&oldid=1156370" இலிருந்து மீள்விக்கப்பட்டது