பக்கம்:அரை மனிதன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



54

அரை மனிதன்

இப்ப எங்க தம்பியின் மனைவி நகை அதிகம் போட்டுக் கொள்வது இல்லை. அது ’பாஷன்’ ஆகிவிட்டது என்று சொல்லுகின்ற அளவுக்கு நான் சொன்ன ஒரு சொல் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி விட்டது.

இதெல்லாம் என் அம்மாவைப் பார்க்கப் போகும் பொழுது அவள் பேசத் தெரிந்து கொண்டேன். என்னால் என் அம்மாவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்குப் பெரிய வருத்தம். நான் கால் ஒடிந்து போய்க் கிடக்கிறேன் என்பதற்காக அல்ல. கால் ஒடிந்த எனக்கு ஒரு கால் கட்டுப் போட்டு விட்டால் அவர்கள் நிம்மதியாகக் கண்களை மூடிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். ’டே!’ நீ வீட்டோடு வந்து விடு; தம்பி மாதாமாதம் பணம் அனுப்புகிறான். உனக்கு என்று தானா உலை வைக்கப் போகிறோம். அப்பா உன்னை அச்சாபீசில் சேர்த்து விடுகி றாராம். அங்கே கம்பாஸ்டர் வேலை செய்யாவிட்டாலும் பைண்டிங் வேலை செய்யலாம்' என்று அறிவுரை சொன்னார்கள்.

என்னால் அந்த உதிரிகளை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. நான் இங்கு வந்து விட்டால் எந்தத் தம்பி பணம் அனுப்புவாள்? இதெல்லாம் அம்மாவுக்கு எப்படித் தெரியும். அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தால் போதும். அம்மா எப்ப டியாவது பிழைத்துக் கொள்வாள். பேர்த்தியை எடுத்துக் கொண்டால்கூடப் போதும். பொழுது போய்விடும் என்று சொல்லுவார்கள். அப்பாதான் பிரச்சினை மிகவும் முக்கியம். கண் காட்டிராக்ட் தீர்ந்து விட்டால் அந்த எம்.ஒவை மறுத்து விட்டாலும் மறுத்து விடுவார். அவ்வளவு வைராக்கியம் அவருக்கு. எங்கள் வாழ்க்கை ரயில் வண்டிப் பயணிகளைப்போலத்தான். முந்நூறு மைல் பயணம் செய்யும் பயணிகளைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஒன்பது மணி நேரத்தில் தனி உறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/56&oldid=1156779" இலிருந்து மீள்விக்கப்பட்டது