பக்கம்:அரை மனிதன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ரா. சீனிவாசன்

57

"அண்ணா! நீ மேலே படித்த பாடங்களை எல்லாம் இங்கே ஒப்புவிக்காதே. அவை அங்கே அவர்கள் கடைப்பிடிக்கட்டும். சமுதாயம் அவர்கள் கட்டுக்கோப்பில்தான் இருக்கிறது. அது அங்கே அவர்கள் அந்த நல்ல பண்புகள் அடைவதற்குச் செய்த முயற்சி. இந்தச் சமுதாயம் அந்த ஒழங்கான வாழ்வை அமைக்க எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறது. பெரிய பெரிய ஞானிகள் பாடுபட்டு இருக்கிறார்கள். வள்ளுவர், சங்கரர் போன்ற நீதிமான்களும் ஞானிகளும் அவர்களுக்கு உயர்ந்த லட்சியங்களைத் தந்து இருக்கிறார்கள். காந்தி, அண்ணா, காமராசர், பெரியார் போன்றவர்கள் நீதிக்கும், நேர்மைக்கும் போராடி இருக்கிறார்கள். இந்தச் சமுதாய ஒழுங்கு கட்டுப்பாடு அறியாமை நீங்கி நல்ல நெறியில் வாழ வேண்டும் என்று பாடுபட்டு இருக்கிறார்கள். அந்த நெறியில் அவர்கள் பாடுபடுகிறார்கள். ஆனால், அவர்கள் முழு வெற்றி காண முடியாது.” "இந்தச் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை நீதிகள் ஆட்டம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும். உங்கள் தம்பி உயர்ந்தவன், படித்தவன், அந்த நீதிகளை அறிந்தவன்தான். ஆனால் ஏன் சுதந்திரமாக வாழ முடியவில்லை. தந்தை தாய்ப் பேண்', 'தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை', 'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்று அவனும்தான் படித்து இருக்கிறான். இராமயணம் பெரிய காவியம். தாய் சொல்லக் கேட்டுத் தந்தை தந்த ஆட்சியை உதறித் தள்ளினாள் அந்த உத்தமன். இன்று மருமகள் வீட்டுக்கு வந்ததும் யார் சீதையைப் போல் பெரியவர்களுக்குத் தொண்டு செய்து கொண்டு நடக்கிறார்கள். அவள் சொல்லைக் கேட்டு நாட்டு ஆட்சியை அல்ல வீட்டைத் துறக்கிறார்கள் இந்தத் தம்பிமார்கள். அவர்கள் நீதி அறிந்தவர்கள்; கடமை உணர்ந்தவர்கள்; அவன் இந்த ஏற்றத் தாழ்வு' என்ற சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்டவன்தான். அவன், தன் மனைவியிடம் உயிரை வைத்திருந்தால் நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/59&oldid=1156914" இலிருந்து மீள்விக்கப்பட்டது