பக்கம்:அரை மனிதன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

அரை மனிதன்


அவனை இங்குப் பார்க்க முடியாது. உன் தம்பி மனைவி உங்களுக்குச் சேவை செய்ய மறுத்தாள். இங்கே 'அவள்' உங்களுக்கு உயிர்விடக் காத்திருக்கிறாள். இதுதான் வாழ்க்கை. மனிதன் நல்லவன்தான். இந்த வர்க்கப் பாகுபாடுகள்தாம் அவன் பண்பைக் கெடுத்துவிட்டது. எல்லாரும் இப்படித்தான் கனவு காண்கிறார்கள். ஒவ்வொருவரும் அந்த மேல் நிலையைக் கண்டு மோகம் கொள்கிறார்கள். எப்படியா வது பணக்காரனாகிவிட வேண்டும். அப்புறம் நிம்மதியாய். இருக்கலாம். உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. காலத்துக்கும் கைகட்டிக் கொண்டு நிம்மதியாகக் காலம் கடத்தலாம். வழிவழியாகக் குடும்பம் நன்றாக இருக்கும். இப்படித்தான் இளைஞர்கள் கனவு காண்கிறார்கள். ஏன் ஒவ்வொரு வரும் கனவு காண்கிறார்கள்.' 'நீயும் நானும்தான் நடுத்தெருவில் இருந்து கொண்டு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நீ சில சமயம் பொருமுகிறாய். நான் ரசிக்கிறேன். இதுதான் வேறுபாடு.” "உன் தம்பியை வெறுப்பதால் பயன் இல்லை. அவனைப் போன்றுவர்களால்தான் எங்களுக்கு நிறைய வாரிக் கொடுக்க முடியும். உழைக்கும் கூட்டம் எங்களிடம் வர முடியாது. அவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியும். யாராவது உழைப்பாளியை நீ இங்கே லாட்ஜிகளில் காண முடியுமா. எல்லாம் வெளியூர்க்காரர்கள் என்று நினைக்கிறாயா? இல்லை. உள்ளுர்க்காரர்கள்தாம். அவர்களிடம் அதிகம் பணம் இருக்கிறது.' 'பணம் இல்லாதவர்களும் பண்பு கெடுகிறார்கள். அது தான் நம் சகாக்கள். பணம் இருக்கிறவர்களையும் அது கெடுக்கிறது. அதுதான் உன் தம்பி. பணம், உள்ளவனையும் கெடுக்கும்; இல்லாதவனையும் கெடுக்கும். நடுத்தர மக்கள் தாம் பணத்தால் கெடாதவர்கள். மானம், ஒழுக்கம், பண்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/60&oldid=1156918" இலிருந்து மீள்விக்கப்பட்டது