பக்கம்:அரை மனிதன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

59

இவை அவர்களிடத்தில்தான் இருக்கின்றன. அவர்களை நம்பித்தான் இந்தத் தேசமே உருவாக வேண்டும். அவர்கள்தாம் இந்த நாட்டுப் பண்பாட்டின் காவலர்கள். நாம் இங்கே உதிரிகள். கெட்டுபோவதால் அவர்கள் கெட்டு விடுவார்கள் என்று நினைக்காதே. நாம் கெடுவதைத் தவிர வேறு வழி இல்லை. எந்த வர்க்கப்பிரிவு உன் தம்பியைக் கெடுத்ததோ அதுவேதான் இங்கு உள்ளவர்களைக் கெடுக்கிறது. நீ இங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. வரவும் கூடாது. ஆனால் உன் கால்கள் உன்னை இங்கு இழுத்து வந்து விட்டது' என்று அவள் தன்னை விளக்கிப் பேசினாள். "அவள் என் தம்பி' என்று அவளிடம் சொன்னேன். அவள் தனக்கும், அவனுக்கும் ரயில் பயணம் ஏற்பட்டது' என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவனை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். அது அவள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். அவன் 'என் தம்பியின் துணைவி என்று நினைக்கும் பொழுது அவளை ஏன் வெறுக்க வேண்டும். நான் மத்தியதர வாழ்க்கையை விட்டுக் கீழே வந்து விட்ட பிறகு அந்த அளவுகோல் கொண்டு அவளை மதிப்பிட விரும்பவில்லை. வாழ்க்கயிைன் அளவுகோலால் பார்க்கும்பொழுது அவளை விரும்புவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. நடக்க முடியாத எனக்கு அவள்தான் 'நாஸ்த்தா' வாங்கி வருவாள். சில சமயம் இரண்டு பேரும் சேர்ந்தே உணவு விடுதிக்குச் செல்வோம். அவள் காசு மட்டும் நான் வாங்க மாட்டேன். அவளும் என் காசால் சாப்பிட மாட்டாள். அந்த வகையில் நாங்கள் சுதந்திரவாசிகளாக வாழ்ந்தோம். என்னோடு அவள் வரும்பொழுது சிலர் பொறாமையால் புழுங்குவார்கள். இந்த நொண்டி அதிருஷ்டசாலி. இந்த மாதிரி 'உருப்படி' நமக்குக் கிடைக்கில்லையே என்று உற்று உற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/61&oldid=1156916" இலிருந்து மீள்விக்கப்பட்டது