பக்கம்:அரை மனிதன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அரை மனிதன்


பார்த்து ஒரு மாதிரியாக விலகியவர்களையும் பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் கண்களில் அவள் என் துணைவி. நினைத்துப் போகட்டுமே. இந்தச் சொற்களில் என்ன அர்த்தம் இருக்கிறது?

4

அம்மாக்கண்ணுவின் போக்கு விசித்திரமாக இருந்தது. அவள் நல்ல உறவுகள் கிடைத்தும் அவற்றை அவள் தன் வாழ்க்கை உயர்வுக்குப் பயன்படுத்தவில்லை. பற்றும் பசையும் அற்ற நெஞ்சோடுதான் வந்தவர்களிடம் பழகினாள். 'இந்த உலகம் எனக்கு இந்த அளவில்தான் மதிப்புத் தருகிறது; ஆனால் அதைச் சொல்லியே மதிப்பைக் குறைக்கிறது. நான் செய்யும் தொழில் அவர்களைக் கவர்கிறது; என்னைப் பாராட்டுகிறார்கள். ஏன் புகழவும் செய்கிறார்கள். பிறகு எனக்கு நன்கொடையும் தருகிறார்கள். நான் இந்த ஆடவர்கள் ஒரு சிலரை சந்தோஷப்படுத்துகிறேன். அவர்கள் பணத்தைத் தருகிறார்கள்.’’ என்று கூறுகிறாள். கள்ளோ காவியத்தில் மங்கை பம்பாயில் ஒரு ஹோட்டல் கடையில் உட்காருகிறாள். அதனாலேயே அந்தக் கடையில் அபரிமிதமான வியாபாரம் நடக்கிறது. பணம் வந்து சேர்கிறது. அவள் அவர்களுக்கு விருந்தாகிறாள்; இவள் பலருக்கு மருந்தாகிறாள். அதாவது அவசியம் ஆகிறாள். அதை வைத்துத்தான் என் குடும்பத்தை உயர்த்துகிறாள். என் அப்பாவுக்குத் தெரிந்தால் அதைவிட அந்தக் கண்களையே இழந்து விடுவார். ஒரு 'குச்சிகாரியின்' பணம். அது எப்படி அவருக்குத் தெரியப் போகிறது. அது தம்பியின் பணம்தானே. என் தம்பி இப்படிக் குட்டிச்சுவர் ஆவான் என்று எதிர் பார்க்கவில்லை. பாவம் அந்தக் குடிப் பெண்ணுக்குத் தெரிந்தால் எவ்வளவு மனம் புண்படும். என் தம்பியை இவள் கெடுக்கிறாள் என்றால் அவளை எப்படி இனியவளாக ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/62&oldid=1156917" இலிருந்து மீள்விக்கப்பட்டது