பக்கம்:அரை மனிதன்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

61கொள்ள முடியும். நான் தானே காரணம்? என் குடும்பத்துக்காகத் தானே அவள் உழைக்கிறாள். அவன் நேரடியாக அப்பாவுக்குக் கொடுக்க மாட்டான்; மறைமுக வழியில் அந்தப் பணம் அவருக்கே போய்ச் சேருகிறது.

என்னமோ அம்மாகண்ணுவிடம் அவனுக்கு ஒரு வெறியே உண்டாகிவிட்டது. நான் அவளைப் போக வேண்டாம் என்று தடுத்து விட்டேன். அவன் அவள் இருக்கும் இடம்தேடி வந்தான். பிறகு உண்மை தெரிந்து கொண்டான் அவள் நடைவாசி என்று. திடீரென்று அவனுக்கு ஒர் நடுக்கம் உண்டாகி விட்டது. அவளால் தனக்கு என்ன நோய் வருமோ என்று அஞ்சி விட்டாள்.

டாக்டரிடம் சென்று தற்காப்புக்காக ஊசிகளும் போட்டுக் கொண்டான் என்று கேள்வி. இவள் "சமூகத்துக்கு விரோதி" என்று நினைக்கத் தொடங்கினேன். இவளால் எத்தனை குடும் பங்கள் கெடுகின்றன. இவளை நானே போலீசில் பிடித்துக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். பிறகு எங்கோ படித்த நினைவு. "ஒருவரை அவர் பால் உணர்வு நடத்தையைக் கொண்டு மதிப்பிடாதே. அவரால் சமூகத்துக்கு நன்மையா தீமையா என்றுதான் மதிப்பிட வேண்டும்” என்று எங்கேயா படித்தேன். அப்படிப் பார்த்தால் இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் சமூகவிரோதிகள்தாம். ரங்கன் ரவுடியாகி விட்டான். கையில் ஒரு கத்தி வைத்துக்கொண்டிருப்பான். யாராவது முறைத்தால் சதுக்கென்று கிழித்து விட்டு ஓடி விடுவான். மறுபடியும் நாலுநாள் அந்தப் பக்கம் தலைகாட்ட மாட்டான். அவனுக்கு ஏனோ அம்மாகண்ணுவிடம் ஓட்டம் விழுந்தது.

அவனே சொல்ல ஆரம்பித்தான். "அண்னே" இது நல்லா இல்லை. இவள் "பிசினஸ்" பண்ணுகிறாள். உங்களால்தான் பார்க்கிறேன்” என்றான்.

என்னிடம் தனி மதிப்பு வைத்திருந்தான். நான் நல்ல நிலையிலிருந்து வந்தததால் அவன் மதிப்பு காட்டினான். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/63&oldid=1155020" இருந்து மீள்விக்கப்பட்டது