பக்கம்:அரை மனிதன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

65


முடியவில்லை. அவள் ஒரு தியாகியாகவே பட்டாள். அவள் என்மீது உயிர் வைத்திருந்தாள்.

நான் நொண்டி; ஒட முடியாது என்பதால்தான் என்னைச் சுற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினாள். இப்பொழுது என் சுய நலம் காரணமாகத்தான் அவளை வெறுக்கத் தொடங்கினேன். என் தம்பியைக் கெடுக்கிறாளே என்பதால்தான் அந்த வெறுப்பு. அதற்காக அவளை ரவுடி ரங்கனிடம் ஒப்புவிப்பது அதைவிடக் கொடுமை.

அம்மா என்னைப் பற்றி நினைத்துச் கலக்கமடைந்தாள். அப்பா மறுபடியும் கண் பெற்றுத் தொழில் நடத்தினார். தம்பியின் பணமும் அவருக்கு நின்று விட்டது. 'மே'யும் யாரையும் அதற்குப் பின் 'பொருட்’படுத்தவில்லை.

தம்பி அவளையே வேண்டும் என்று லாட்ஜ் முதல்வரிடம் சொல்லியிருக்கிறான். அவர் கூப்பிட்டு அனுப்பி யிருக்கிறார்.

"நீ ஏன் என்னை வெறுக்கிறாய்?"

"உன்னை மட்டும் அல்ல; உன் கூட்டத்தையே வெறுக்கிறேன்."

"உனக்காக நான் நெக்லஸ் கொண்டு வந்திருக்கிறேன்."

"யாருடையது அது?”

"என் மனைவியினுடையது அது.”

"அவள் கேட்டால் லாக்கரில் இருக்கிறது என்று சொல்லி விடுவேன். தேவைப்பட்டால் புதிது வாங்கி வைத்து விடுவேன்" என்றான்.

"இன்று கொடு; நாளைக்குப் பதில் சொல்லுகிறேன்" என்றாள்.

அவன் அவள் கழுத்தில் போட நினைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/67&oldid=1461964" இலிருந்து மீள்விக்கப்பட்டது