பக்கம்:அரை மனிதன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

67


அவளுக்கு நான் என்ன செய்ய வேண்டும். அவள் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் எங்கள் எதிர் காலம் அமைய வேண்டும். என் அப்பாவின் லட்சியம் தொழில் செய்ய வேண்டும்; கடனில்லாமல் வாழ வேண்டும். அம்மாவின் லட்சம் மகள் குறையில்லாமல் வாழ வேண்டும். என்னைப் பற்றிய நொண்டி எண்ணங்கள் அவ்வப்பொழுது அவளுக்குத் தோன்றி மறைந்து கொண்டிருக்கும்.

அப்பாவுக்கு என்னைப்பற்றிய நல்ல எண்ணமே கிடை யாது. அப்படி நல்ல எண்ணம் இல்லாவிட்டால் 'அவன் பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம்' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதே போலத்தான் அவர் என்னைப் பற்றி முடிவு செய்துவிட்டார். அவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே நான் வெளியே செல்லுகிறேன். என் சுவைக்காகவா நான் போகிறேன்? ஒரு பெண்ணும் ஆணும் பழகினாலே அதில் ஏதோ இருக்க வேண்டும் என்ற தத்துவத்தில் பழகிவிட்ட சமுதாயத்தில் நானும் அவளும் ஒன்றாக இருப்பதில் ஒரு தத்துவத்தை எப்படிக் காண முடி யாமல் இருக்க முடியும்?

ஆனால் என்ன தத்துவத்தைக் காண முடியும். நெருங்கிப் பேசினால் மேல்மட்டத்தில் அவர்கள் காதலர்கள்; இடை மட்டத்தில் அவர்கள் கணவன் மனைவி; கீழ் மட்டத்தில் அவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள்.

என்னைப் பொறுத்தவரை ஒரு கேள்விக்குறிதான். நான் என் பெற்றோர்களுக்கு ஒரு கேள்விக்குறிதான். ஏன் நானே எனக்கே ஒரு கேள்விக்குறிதான். நான் என்ன செய்ய வேண்டும்? யாருக்காக வாழ வேண்டும்? இப்படி யாரும் எப்பொழுதும் கேள்வி கேட்டதில்லை. அவர்கள் வாழ் வார்கள், வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். யாருக்காக என்ற கேள்வி அவர்களுக்கு எழுந்ததே இல்லை.

இந்தக் குடும்பம் என்ற ஒரு சின்ன சொல்லை எப்பொ ழுது மனிதன் படைத்துக் கொண்டானோ அப்பொழுதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/69&oldid=1461966" இலிருந்து மீள்விக்கப்பட்டது