பக்கம்:அரை மனிதன்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

69


அவள் கழுத்தில் ஒரு நெக்லஸ் போட்டுக் கொண்டி ருந்தாள். அதை அவள் மறைக்க விரும்பவில்லை. என்னிடம் அதைக் காட்டினாள்.

"ஏது இது?”

"பழங்காலத்துக் கதை தெரியுமா?”

"எல்லாக் கதைகளும் பழங்கதைகள்தான்"

"அதாவது மாதவி கதை அவள் தான் இந்தப் பொதுத் தொழிலில் பெயரும் புகழும் பெற்றவள். அவள் முதலில் மாலையைத் தான் வாங்கிக் கொண்டாள். அரசன் அந்த மாலையைக் கொடுத்தான். அதைக் கோவலன் வாங்கிக் கொண்டான். அது கதை. இங்கே கோவலன் ஒரு மாலையைக் கொண்டு வந்து தந்தான். அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"இது இருக்க வேண்டிய இடம் வேறு. வீடு வாசல் குடி குடித்தனம் இப்படி ஒழுங்காக வைத்து வாழ்பவர்களுக்கு இது ரொம்ப அவசியம். நமக்கு எதற்கு?"

"இதை ரவுடி ரங்கன் கொடுத்தான்"

"ஆமாம் இதை முன்னாலேயே சொல்லிக் கொண்டி ருந்தான். எந்த வீட்டில் புகுந்து கொள்ளை அடித்தானோ?”

"உங்கள் வீட்டில்”

"எங்கள் வீட்டில் அம்மாவுக்கு இது ஏது? எப்பொழுது பெண்ணைப் பெற்றார்களோ அதோடு நகை ஆசையை மறக்க வேண்டியதுதானே?"

"ஏன் உங்களுக்கு மருமகளுக்கு எதுவும் போட மாட்டீர் களா?"

"போடுவோம். போட்டோம். அதுதான் அவள் எடுத்துக் கொண்டு போய்விட்டாளே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/71&oldid=1149805" இருந்து மீள்விக்கப்பட்டது