பக்கம்:அரை மனிதன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அரை மனிதன்


"ஏன் அதுவாக இது இருக்கக் கூடாதா?”

"நீ சொன்னால் இருக்கலாம். ஆமாம் அதுவே தான்"

"அல்சேஷன்; தம்விட்டு வேலைக்காரன் அத்தனை பேரையும் கடந்து"

"அது உள்ளுர்த் திருடன் கட்டாயம் முடியும்"

"நீ அவனுக்கு ஒப்புக் கொண்டாயா?”

"பின் நான் யாருக்காவது ஒப்பந்தப் பட்டால்தான் நல்லது. இல்லாவிட்டால் இப்படியே உதிரியாகப் போக வேண்டியதுதானே.”

"என் அண்ணனுக்கு ஒரு கலியாணம் செய்து விட்டுத் தான் அப்புறம்".

"உனக்கு அண்ணன் இருப்பதாகவே நீ சொன்ன தில்லையா?”

"அண்ணன் மறந்து விட்டால் தங்கை என்ன செய்ய முடியும்?"

"ஏன் அவன் பணக்காரப் பெண்ணைக் கலியாணம் கட்டிக் கொண்டானா?"

"சில பேர் தங்களை விட்டு வேறு விதமாக இந்த உல கத்தைப் பார்க்க மாட்டார்கள்" என்றாள்.

அவள் கண்களில் இரண்டு துளிகளைக் கண்டேன். நான் அவள் அழுது பார்ததது இல்லை. ஏழைகள் துன்பப்படுவார்கள். ஆனால், வாய்விட்டு அழமாட்டார்கள். காய்ப்பு ஏறிய உடம்பில் எங்கு அடிப்பட்டாலும் அவ்வளவாக உறைக்காது.

ரங்கன் அடி, உதை, குத்து இதில் உழன்றவன். எவ்வளவு அடித்தாலும் வாங்கிக் கொள்வான். செமை உதை வாங்குவான். ஆனால் அடங்க மாட்டான். அவனுக்கு ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/72&oldid=1461969" இலிருந்து மீள்விக்கப்பட்டது