பக்கம்:அரை மனிதன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அரை மனிதன்


இவ்வளவு சிறப்பாக நடைபெறாது. ஒரு பெண்ணுக்குப் பல அரசர்கள் சண்டை போட்டுக் கொண்ட பிறகுதான் கலியாணமே நடந்ததாம். அது பழைய கதை; அந்தக் கதை இந்த வட்டாரத்தில் நான் பார்க்க முடிந்தது.

'வாம்மே' என்று இழுத்தான்.

அவள் பயப்படவே இல்லை. அவள் தன் கற்புக்காக

என்றைக்கும் பயந்தது இல்லை. அவன் ரவுடித்தனத்துக்கும் அவள் பயப்படவில்லை.

“என்ன மச்சான் சொல்றே" என்றாள்.

“வந்தையா வழிக்கு” என்று அடங்கிவிட்டான்.

"எங்கூட வந்துவுடு" என்றான்.

"அதுதான் நடக்காதண்ணே" என்றாள்.

"மச்சான்" என்று கூப்பிட்டபோது அவன் மயங்கினான். 'அண்ணே'என்றபோது தயங்கினான்.

"எப்படி நடக்காது நான் பார்த்துக்கிறேன்" என்று கருவினான்.

"ரவுடி ரங்கன் என்னைக் குத்தகையா"

"பேசி இருக்கிறான்?"

"ஆமாம் அட்வான்சு கொடுத்திருக்கான்"

"நெக்லஸ்" என்றாள்


"அப்படியா கதை"

நான் போய் மீட்கும்முன் ரவுடி ரங்கன் அங்கு வந்து விட்டான். கந்தன் அவள் கைப்பிடியை நெகிழ்த்தினான். அவள் காப்பாற்றப்பட்டாள்.

"மறுபடியும் அவளைத் தொட்டே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/74&oldid=1461971" இலிருந்து மீள்விக்கப்பட்டது