பக்கம்:அரை மனிதன்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

73


"சரிதாண்டா பார்த்துக்கறேன் ஒரு கை" என்றான்.

எல்லாருக்கும் ஒரு பரபரப்பு இருந்தது. இரண்டு பெரிய கைகள் கலக்கப் போகின்றன என்று எதிர்பார்த்தார்கள். கந்தன் குடிபோதையில் மூழ்கி இருந்தான். ரங்கன் அவள் போதையில் மெய்ம் மறந்து கிடந்தான்.

நான் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த உதிரிகளின் கூட்டத்தில் இப்படி மோதல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

இவர்கள் எல்லாம் வெறும் சோற்றுப் பட்டாளம் என்றுதான் நினைத்து வந்தேன். எங்கேயாவது கிடைத்தைச் சுருட்டிக் கொண்டு குடித்து எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று நினைத்தேன்.

சினிமாப்பட்டு ஒன்று பிடித்த நினைவு எந்தப் படத்தில் என்று தெரிகிறது.

'எது சுகம் எங்கே சுகம்’


'என்ன சுகம்?' என்று தொடரும் பாட்டு இது.

"படைத்தான் கடவுள் பெண்ணை, ஒரு கோப்பையில் மது; மற்றொரு பக்கத்திலே மாது. மதுவும் மாதுவும் இருந்தால் உலகத்தில் சுவர்க்கத்தைப் பார்க்கலாம். இதைவிட வேறு என்ன இருக்கிறது” என்பதுதான் அந்தப் பாட்டு. எனக்கு அந்தப் பாட்டின் கருத்துத்தான் வருகிறது. அடிகள் நினைவுக்கு வரவில்லை.

இந்த இரண்டுக்கும் இவர்கள் அலைகிறார்கள். மேல்மட்டத்து மனிதர்களைப் போலவே வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களை இவர்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் கிளப்புகளில் என்ன செய்கிறார்கள். குட்டிகளும் புட்டிகளும் உருள்கின்றன என்றுதான் பேசிக் கொள்ளக் கேட்டு இருக்கிறேன். நவநாகரிகமான ஹோட்டல்களில் மங்கையரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/75&oldid=1150971" இருந்து மீள்விக்கப்பட்டது