பக்கம்:அரை மனிதன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

75


உழைப்பை நம்பி வாழ்கிறார்கள். என் தம்பியும் நன்றாகத்தான் இருந்தான். உழைப்பைத்தான் நம்பி வாழ்ந்தான். கடுமையாக உழைத்துப் படித்தான். எப்படியோ அவனுக்கு இந்தப் போட்டி உலகம் கண்ணுக்குப் பட்டுவிட்டது. அவ னோடு படித்த இளைஞர்கள் ஒரு சிலர் வாழ்ந்த அர்த்த மில்லாத வாழ்க்கையைப் பார்த்திருக்கிறான்.

பொதுவாக இந்த நாட்டில் சமூகத்தில் ஒரு கொடுமை இருக்கிறது. மேல் நிலையில் வாழ்கிறவர்கள் தம்பணத்தைக் காட்டிப் படித்த இளைஞர்களை வலை தேடிப் பிடிக்கிறார்கள். அவர்கள் தமக்கு நிகரான சம அந்தஸ்து உடையவர்களுக்குக் கொடுத்துக் கொள்ளட்டும். வாங்கிக் கொள்ளட்டும். இந்த இளைஞர்கள் அறிவும் ஆற்றலும் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுகிறார்கள். 'படித்தவன்' என்ற முத்திரை குத்தப்படுகிறது. அவனை உடனே விலைபேசி வாங்கி விடுகிறார்கள். இவன் முன்னுக்கு வருவதாக நினைப்பு. நடைமுறையில் அவன் அவர்கள் வீட்டு ஆள்; அவ்வளவுதான். அவர்கள் வியாபாரத்தை நிறுவனங்களைக் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். அதன் விலைதான் 'வரதட்சணை'. இவனுக்குக் கொடுக்கப்படுகிற விலை.

அவனுக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது; அவன் உழைப்புக்குப் பயன் இல்லாமல் போய்விடுகிறது. அவன் அந்தப் போலி வாழ்க்கையிலிருந்து விடுபட முயல்கிறான். காரும் கண்ணைப் பறிக்கும் கண்ணாடிகளும் வைர நெக்லஸ்களும் திகட்டிப் போய்விடுகின்றன! கிளப்பு டான்சுகள் பெர்மிட்டு குடிகள் இவை போதைகளாக அமைந்து விடு கின்றன. இந்த 'உதிரிகளின்' அலட்சியமான போக்கையும் கேளிக்கைகளையும் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தயாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அவர்கள் மறைவாக நடத்துகிறார்கள். இவர்கள் மறைக்காமல் நடத்துகிறார்கள். அவர்கள் சரக்கு உயர்ந்தது. இவர்கள் மட்ட சரக்கை உபயோகப்படுத்துகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/77&oldid=1461974" இலிருந்து மீள்விக்கப்பட்டது