பக்கம்:அரை மனிதன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அரை மனிதன்


 களா? கட்டாயம் அவன் கையில் இரண்டு கட்டைகள் இருக்கும். அதை வைத்துக்கொண்டு நடந்தால் யார் கண்ணிலும் அகப்பட்டுத்தான் தீர வேண்டும். அந்த வகையில் நான் பிரமுகர் இனத்தைச் சார்ந்தவன் தான்.

நீங்கள் நினைக்கலாம். எப்படி ஒரு நொண்டி வாழ முடியும் என்று. அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை. நொண்டிதான் இந்த உலகத்திலேயே வாழ முடியும். திறமைசாலிக்குத்தான் போட்டி. அவன் முன்னுக்கு வருவது நிரம்ப கஷ்டம். நான் நின்றாலே பஸ்ஸிலே உட்கார இடம் கொடுத்து விடுவார்கள். யாரைக் கேட்டாலும் கை நீட்டினாலும் போதும். என் கைகளில் கட்டைகள் இருக்கின்றன. உடனே காசு வந்து விழும். அப்படிக் கேட்பதற்கு எனக்குப் பிடிப்பது இல்லை. அப்புறம் எனக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அவர்களும் தான் கைநீட்டி வாங்குகிறார்கள். நானும் வாங்குகிறேன். அப்புறம் யார் என்னை மதிப்பார்கள்!

பிச்சை எடுக்கக்கூடாது. பலபேர் அந்தத் தொழிலுக்கே அகவுரவத்தை உண்டாக்கிவிட்டு இருக்கிறார்கள். சிலபேர் பள்ளிக்கூடத்திலே 'நன்கொடை' என்று சொல்லி நிறைய பணம் வாங்குகிறார்கள். அவர்களை யாரும் மதிக்கிறது இல்லை. அப்புறம் நானும் பிச்சை எடுத்தால் என்னைக் கேவலமாக மதிப்பார்கள். கேவலம் ஒரு பள்ளிகூடத்து நிர்வாகி என்று கேவலப்படுத்திலுைம் கேவலப்படுத்துவார்கள். அதனால் நான் பிச்சை எடுக்கிறது மட்டும் இல்லை.

என் தம்பி என்னைவிட வயது குறைவுதான். அதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதே இல்லை. தம்பி என்றாலே அதுதானே அர்த்தம். என்றாலும் அவனுக்கு இரண்டு காலும் நன்றாக இருக்கிறது. அதனால் அவன் என்னை விட கொஞ்சம் உயர்வுதானே. அவன் கொஞ்சம் திமிராகத்தான் நடப்பான். அவன் கால் இருக்கிறது. அதனால் அப்படி நடக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/8&oldid=1461914" இலிருந்து மீள்விக்கப்பட்டது