பக்கம்:அரை மனிதன்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

81


எப்படி அவர்கள் விரயம் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்பொழுது அந்த முரண்பாட்டின் காரணம் உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்.

தேவைக்கு மேல் ஒருவர் சம்பாதிப்பதே குற்றம் என்ற கொள்கை என்னுள் உருவாகி விட்டது. அது ஏனோ தெரியவில்லை. அதுதான் இந்த நாட்டின் தீமைக்கே காரணம் என்பதை நான் நினைத்து வந்தேன். அவளை இதுவரை மதித்ததே அவள் தேவைக்காகத் தவறு செய்கிறாள் என்பதால் தான். அதே உதிரிகளிடத்தில் எனக்கு ஒரு நல்லெண்ணம் இருப்பதே அவர்கள் தேவைக்கு மேல் தவறு செய்வது இல்லை. அவர்களிடத்தில் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. தனக்குப் பசி எடுத்தால்தான் கூலி சுமப்பார்கள். தனக்குத் தேவை என்றால்தான் பிக்பாக்கெட்டும் அடிப்பார்கள். போதிய அளவு கிடைத்து விட்டால் மறுபடியும் அந்த வேலைக்குப் போக மாட்டார்கள். அவர்களுக்கும் சில சமயம் தேவைகள் பெருகி விடுகின்றன. அம்மாகண்ணுகள் பிகுவு செய்தால் வீடு புகுந்து திருடுகிறார்கள். அவசியம் ஏற்பட்டால் கொலையும் செய்து விடுகிறார்கள். அந்த எல்லைக்குப் போகும்பொழுதுதான் அவர்கள் சமூக எதிரிகளாக மாறு கிறார்கள். எங்கேயும் தேவைக்கு மேல் உழைப்பது; சம்பாதிப்பது எல்லாம் தொல்லையும் தீமையும் தருகின்றன என்பதைக் காண முடிகிறது. அப்பொழுதுதான் அவர்கள் சுரண்டல் இனத்தைச் சேர்ந்து விடுகிறார்கள். அது எல்லா வகுப்புகளிலும் காணப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது. அவர்களைச் சமூக எதிரிகள் என்று சொல்லுவது இல்லை. இத்தகைய முரண்பாட்டால்தான் இவளும் இந்தச் சுரண்டல் இனத்தில் அடி எடுத்து வைக்கிறாள் என்று நினைக்கும் பொழுது அவளிடம் உறவு கொள்ள முடியவில்லை. கொள்கையில் முரண்பாடு அமைந்து விடுகிறது. கொள்கையில் முரண்பாடு ஏற்பட்டுவிட்டால் அப்புறம் உறவு கொள்ள முடிவதில்லை. அதனால்தான் அவளை நான் தங்கையாக ஏற்று கொள்ள முடியாமல் போய்விட்டது. அவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/83&oldid=1153252" இருந்து மீள்விக்கப்பட்டது