பக்கம்:அரை மனிதன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



88

அரை மனிதன்



அமைந்து விட்டது. இந்த மத்திய தர மக்கள் எவ்வளவு காலம் இதைத் தாங்கி கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் மட்டும் என்ன வீரம் இல்லையா? ஏதோ சில கட்டுப்பாடுகளுக்கு அடங்கிச் சாதுவாக இருக்கிறார்கள். அங்கே அந்த கடையில் மூன்று பேர் இருந்தார்கள். கையில் அவர்கள் வேலை செய்யும் ஊது குழல் இருந்தது. அதைக் கொண்டே அவனை அடித்து நீட்டி விட்டார்கள். போலீஸ்காரர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களால் அடக்க முடியாத ஒரு ரவுடியைச் சமுதாயம் பழித் தீர்த்துக் கொண்டது. அவர்களுக்குக்கூட ஒரு மனநிறைவுதான். அவர்கள் வேலை குறைந்து விட்டது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

அதற்கப்புறம் ரங்கனின் கொட்டமும் கொஞ்சம் அடங்கி விட்டது. சட்டம் அவனை அவ்வளவாகப் பாதிக்காது என்று நினைத்தான். ஆனால் பொது மக்கள் கொதித்து எழுந்தால் அவன் தலை தூக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்டான்.

அந்த நெக்லசை என் தம்பி மனைவியிடம் சேர்க்க விரும்பினேன். நேரே பஸ் ஏறி அவள் வீட்டுக்குச் சென்றேன். அவளுக்கு என்னைப் பார்த்ததும் பயம் வந்து விட்டது. நான் திருடத்தான் வந்தேன் என்று நினைத்துக் கொண்டாள்.

"உங்கள் வீட்டில் தான் திருடப் போகிறேன்" என்று முன்னால் சொன்ன சொற்கள் அவள் காதில் எதிரொலித்தன. எனக்காகவே வளர்த்த அல்சேஷியன் என்னை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தது. கால்கை இருப்பவர்களுக்குத்தான் கல் உதவி. எனக்கு என் கட்டைகளே போதும். அது எதிர்பார்க்க வில்லை. மனிதன் கட்டையோடு நடப்பான் என்று. அப்படியே அசந்து விட்டது. அவள் அதற்காகச் செலவு செய்த பணம் அத்தனையும் வீண் ஆகிவிட்டது. அது என்னைப் பிடுங்கி விடும் என்று எதிர்பார்த்தார்கள். என்னை ஒன்றும் பிடுங்கிக் குதறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/90&oldid=1461987" இலிருந்து மீள்விக்கப்பட்டது