பக்கம்:அரை மனிதன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அரை மனிதன்


 "உங்கள் விருப்பம் போல் வாழ விடமாட்டோம்" அது உண்மைதான். இந்த நாட்டு மக்களும் வாழ வேண்டும் என்று சொல்லுவோம். அவ்வளவுதான்."

அந்த நேரத்தில் தம்பி இல்லை என்று தெரிந்தது. இருந்தால் அவன் எப்படியும் தலைகாட்டி இருப்பான். அவ ளுக்கு உண்மை உணர்த்தி இருப்பான்.

உண்மை. எது உண்மை? அது எப்படி அவன் சொல்ல முடியும். சொன்னால் அவன் நிலைமை என்ன ஆகும்.

"நான்தான் கொடுத்தேன்" என்று அவனால் சொல்ல முடியும்?”

அது எப்படி அவன் எனக்குக் கொடுக்க முடியும்? பாசம் அவ்வளவு தூரம் வளர்ந்தால் பிறகு உறவு நீடிக்குமே. உறவு அற்றுப் போகப் பாடுபடும் முயற்சியில் இறங்கிவிட்ட தம்பி மனைவி அதை ஒப்புக் கொள்வாளா?.

பழைய நிலை குடும்ப ஒற்றுமை; இந்நாளைய நிலை குடும்ப வேற்றுமை. உறவுகள் வேண்டும் என்பது பழைய நிலை. உறவுகள் அற்றுப்போக வேண்டும் என்பது இந்நாளைய நிலை; தனிக்குடித்தனம் என்ற பெயரால் நடப்பது என்ன? சுயநலமாக வாழ்வது எப்படி என்று செயல்படுத்துவதுதான். ஒரு குடும்பத்தில் நாலு பேர் அண்ணன் தம்பி இருந்தால் ஒருவன் பெரிய உத்தியோகஸ்தன்; மற்றொருவன் சாதாரண நிலை; மற்றொருவன் முடம் இப்படித்தானே இருக்கும். படித்தவன் வசதி உடையவன் தனியாகப் பிரிந்து விட்டால் மற்றவர்கள் கதி. கூட்டுக் குடும்பத்தின் அடிப்படை இதுதான். இந்த நாட்டில் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும். நாலு பேரில் இரண்டு பேருக்கு வேலை கிடைப்பதில்லை. நாட்டு நிலைமைதானே வீட்டு நிலையும். சொத்தைப் பங்கிட்டுக் கொள்ள வரும்பொ ழுது சுமையையும் பங்கிட்டுக் கொள்ள வேண்டாமா? சமுதாய உணர்வே இப்பொழுது செத்து வருகிறது. அதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/92&oldid=1461989" இலிருந்து மீள்விக்கப்பட்டது