பக்கம்:அரை மனிதன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அரை மனிதன்



அதனால் நான் திருடன். இப்பொழுது எனக்கு விஷயம் விளங்கிவிட்டது.

மறுபடியும் அந்த உதிரிகளுள் நான் ஒருவனாக ஆக்கப்பட்டேன் என்பதை உணர்ந்தேன். எங்காவது திருடு நடந்தால் அங்கே வந்து ஆட்களைப் பிடித்துப் போவதைப் பார்த்திருக்கிறேன்.

அந்த சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"உன்னை ரயிலடியில் பார்த்திருக்கிறேன்."

“பயணிகள் இறங்கும் இடம்; ஏறும் இடம்' என்றேன்.

"அங்கே அல்ல; அந்தப் பொரிக்கிகளின் கும்பலில்"

"அங்கே தனியாக யாரையுமே பார்க்க முடியாது. ரயிலடியில் எப்பொழுதும் கும்பலாகத்தான் இருக்கும்"

"அதைச் சொல்லவில்லை. நீ ரவுடி ரங்கன்"

"நான் அல்ல. அது என் நண்பன்"

"நண்பன். நீயும் அவனும் கூட்டாளிகள் தானே"

"பாட்டாளிகள் எல்லாம் என் கூட்டாளிகள்தான்" என்றேன்.

"நீ என்ன கம்யூனிஸ்டா"

"ஏழை கம்யூனிசம் பேசிப் பயனென்ன"

"பின் பணக்காரனா பேசுவான். சரியான ஆளப்பா நீ" என்றார்.

"இந்த நாட்டில் எல்லோரும் பேசப் போகிறார்கள் அதற்கு உரிய காலம் நெருங்கிவிட்டது."

{{gap}"நீ என்ன நக்சலைட்டா"

"நொண்டியைப் பார்த்துக் கேட்கும் கேள்வியா இது. பிரமாதம் நீங்கள் கேட்பது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/94&oldid=1461991" இலிருந்து மீள்விக்கப்பட்டது