பக்கம்:அரை மனிதன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

97



"நீ கொடுத்தாய் என்று தான் சொன்னாள்"

"அப்படீன்னா நானேதான் திருடன். நீங்கள் வெளியே போக வேண்டியதுதான். அந்த அனாதை அம்மாகண்ணுவைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் கட்டாயம் அவசியம் வெளியே இருக்க வேண்டியதுதான். நீ உன் தங்கைக்குச் செய்ய வேண்டிய கடமை. அவள் என் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறாள். பார்த்தாயா அண்ணே! அதைக் கட்டாயம் நான் காப்பாற்றியாக வேண்டும். நான் கொண்டு வந்து கொடுத்தேன் என்று சொன்னால் அவள் என் ஆற்றலில் நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்று அர்த்தம். கொடுத்தவளே உங்களிடம் உண்மையைச் சொன்ன பிறகு நீங்கள் ஏன் உள்ளே போக வேண்டும். அந்த அனாதை அம்மாகண்ணுவைக் காப்பாற்றுவதற்கு நீ கட்டாயம் அவசியம் வெளியே இருக்க வேண்டியதுதான். நீ உன் தங்கைக்குச் செய்ய வேண்டிய கடமை. இதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.”

"நீ தான் கொடுத்தாய்; நான் இல்லை என்று மறுக்க வில்லை. உன்னை நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. நீ அம்மாகண்ணுவுக்கு அவசியம் தேவைப்படுகிறாய். எனக்கும் அவளுக்கும் உறவு இருக்கிறது. ஆனால் அவள் என்னை விரும்பவில்லை. இது ஒரு புதுவகையான உறவு. இதனால் எந்த நன்மையும் இல்லை. அவள் உன்னை விரும்புகிறாள். ஆனால் உன்னிடம் உறவு கொள்ள விரும்ப வில்லை. அவளை என்னை விரும்பச் சொல்ல முடியாது. அவள் உன்னை உறவு கொள்ளச் செய்யமுடியும். நீ தான் அவளுக்கு ஏற்றவன். அவளுக்கு ஒரு கவுரவமான வாழ்வைத் தர வேண்டுமானால் நீதான் அவளுக்கு ஆதரவு தரவேண்டும். ஆனால் நீ சொல்லும் உறவை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாலு பேர் அறிய அவளை மணம் செய்து கொள்ளவேண்டும்."

"அவள் நகரத்துக்கு வந்ததே ஒரு ஆம்படையானைத் தேடி. அப்படித்தான் அவள் சொல்லி இருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/99&oldid=1461996" இலிருந்து மீள்விக்கப்பட்டது