பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. அர்த்தம் புரிகிறது!

ஆண்டவன் படைப்பிலே அத்தனைப் பொருட்களும் அர்த்தம் உள்ளவைகளாகவே விளங்குகின்றன. அர்த்தம் இல்லாத பொருட்களோ அல்லது அவசியம் இல்லாத பொருட்களோ இந்த உலகில் எதுவுமே இல்லை.

ஒருவருக்கு உபயோகப்படுகின்ற பொருட்கள் மற்றவர் களுக்குத் தேவையற்றதாகத் தோன்றலாம். தீமை பயப்பதாக கூடத் தெரியலாம். இந்த உலகத்திலே இருக்கவே கூடாது என்றும் கூட மற்றவர்கள் அகற்ற முயலலாம்.

தனக்குத் தேவையில்லை என்பதனாலேயே அதனைத் தரம் தாழ்த்திப் பேசுவது என்பது தரமுள்ள மனிதர்களுக்கு அழகில்லை. தேவையில்லாமல் தற்போது தெரிகின்ற பொருட்கள், இன்னும் சிறிதுகாலம் கழித்துக் கண்கண்ட தெய்வமாகக் கூட உதவலாம்.

அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு போகின்றவர்கள் தான் அறிவாளிகள் ஆவார்கள். ஆரவாரித்துக் கொண்டு, அலட்சிய நோக்குடன், தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம், என்று குதர்க்கம் பேசுவோர்கள் அறிவிலிகளாகத் தான் வெளிப்படுவார்கள்.

தேவையில்லாத ஒன்று என்றும், தூரத்தே தள்ளிவைக்கப் பட வேண்டிய ஜந்து என்றும் விளையாட்டுக்களைப் பற்றிய