பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

லிக் கொடுக்கும் நிலையில் இருந்த எனக்கு, இந்தக் கேள்விகளையும், குதர்க்க வாதங்களையும் சந்திக்கும் திறனில்லாமல் போயிற்று. ஏன்?

ஏனென்றால், விளையாட்டுத் துறையில் என்ன இருக்கிறது? எல்லாம் அர்த்தமில்லாத விளையாட்டுக்கள் என்று கூறப்படும் குற்றச் சாட்டுகளை மறுக்க சரியாக விளக்கம் எதுவும் கிடைக்காததால் தான்.

அதனை மிகுதிப்படுத்துவது போல ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. என் கல்லூரி வாழ்க்கையின்போது.

கல்லூரி ஆண்டு மலருக்காக மாணவர்கள் ஆசிரியர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களை விளக்கும் கவிதைகள் கட்டுரைகள் தரலாம் என்று வெளிவந்த ஒர் அறிக்கையைத் தொடர்ந்து, நான் ஒரு கவிதை எழுதித் தந்தேன். அந்தக் கவிதையானது விளையாட்டையும் உடல்நலம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

அதனை வாங்கிப் பார்த்து, வாய்விட்டுப் படித்தார் மலர் பொறுப்பாளர் ஒருவர். தமிழ்ப் பேராசிரியர். 'கவிதை நன்றாக இருக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தது'. என்று கேட்டார். எனது எழுத்துக்குக் கிடைத்த முதல் அவமானம் இது. விளையாடுபவர்களுக்கு மூளை எதுவும் கிடையாது என்ற அர்த்தத்தில் அவர் பேசினார்.

அதற்குப் பிறகு எங்களிடையே நடைபெற்ற ஆரவாரமான விவாதங்களுக்குப் பிறகு, ஒரு சில கேள்விகள் என் முகத்தில் அடித்தாற்போல் வந்து விழுந்தன.

விளையாட்டு வாத்தியாருக்குத் தமிழ் என்ன தெரியும்? இந்த விளையாட்டில் என்ன இருக்கிறது? இது ஒரு சவால்!