பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16பெறுவோர் திகழ்வதால் தான், காலங்காலமாக மக்களினத் தோடு விளையாட்டுக்கள் இடம் பிடித்துக்கொண்டு ஒளிர்கின்றன. மகிழ்கின்றன.

ஆர்வத்துடன் வருபவர் அனைவரும் ஆனந்தம் பெறுகின்றார்கள் என்பது தான் விளையாட்டுக்கள் வழங்குகின்ற வித்தியாசமான பரிசுகளாகும்.

துன்பம் தராத இன்பம் தருகின்ற பொருட்கள் நான்கு என்று கூறவந்த தொல்காப்பியர், செல்வம். புலன், புணர்வு, விளையாட்டு என்று சுவைபடத் தொகுத்துக் காட்டுகின்றார்.

தொல்லைகளைத் தவிர்த்துவிட்டு, தொடரும் துயரங்களைப் போக்கிவிட்டு, எந்நேரமும் இன்பத்தையே எல்லோருக்கும் அள்ளித்தருவதால் தான், விளையாட்டுக்கள் எல்லாம் அழிந்துபோகாமல், விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து கொண்டே வருகின்றன.

ஆனந்த ரகசியம்

எங்கே கிடைக்கும் இன்பம்? எனக்குக் கிடைக்குமா நிம்மதி? என்று ஏங்கி அலைபவர்க்கு, இன் முகம் காட்டி ஈடற்ற இன்பங்களை வழங்குவது விளையாட்டுக்களாகும். எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

தன்னுள்ளே தோன்றுகிற பயங்கர நினைவுகளிலிருந்து விளையாட்டுக்களில் பங்கு பெறுபவர் எளிதாக விடுபடுகிறார்.

தன்னுள்ளே தோன்றுகின்ற தாங்காதக்களைப்பிலிருந்து. சமர்த்தாக வெளியேறி உல்லாசமான ஓய்வினைப் பெறுகின்றார்.