பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

அர்த்தம் உள்ளவைகள் தாம், ஆறறிவு படைத்த மனிதர்களிடையே ஆனந்தமான வரவேற்பைப் பெறுகிறது.

அர்த்தம் இல்லாத பொருள் எத்தனை தாம் விலை உயர்ந்தவைகளாக இருந்தாலும், வரவேற்கப்படுவதில்லை.

மாறாக, விலக்கப்படுகிறது. வெறுத்தொதுக்கப்படுகிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்களின் மதிப்புக்கும், துதிப்புக்கும் மூலப்பொருளாக இருந்து வருபவை விளையாட்டுக்கள் தாம்.

ஆவைகள் எப்படி எப்படியெல்லாம் மனித இனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் சஞ்சீவிப் பொருளாக விளங்கி வருகின்றன என்கிற கருத்துக்களைத் தான், "அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்' என்னும் இப்புத்தகத்தில் விவரித்துள்ளேன்.

விளையாட்டுக்கள் ஒன்றும் புரியாத புதிருமல்ல; வேண்டப்படாத விவகாரமும் அல்ல.

விளையாட்டுக்கள் மக்களுக்கு எளிமையாக, இலவசமாகக் கிடைக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காகவே