பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

காற்றுக்கோ கவலைமேல் கவலை, 'தான். எப்படித்தான் சுழன்றடித்தாலும், இந்தக் குட்டிச் சுவர் என்னைத் தடுத்து நிறுத்தி விடுகிறதே' என்று குட்டிச்சுவர் பக்கம் கைகாட்டி விட்டு மறைந்து போனதாம்.

குட்டிச் சுவரோ கண்கலங்கி கீழே காண்பித்ததாம். என்னையே பறித்து ஆட்டுவிக்கும் ஆண்மையாளன் கீழே இருக்கிறான் என்று காட்டியதாம்.

அங்கே ஒரு எலி இருந்ததாம். கதை எப்படி?

எலிக்குத் தனக்கு தேவையானவன் தன் இடத்திலேயே தன் இனத்திலேயே இருப்பது தெரியாமல், அலைந்தது போல் தான், இன்று விளையாட்டுக்களைப் பற்றிப் புரியாமல் வீரர் களையும் விவேகிகளையும் பலர் தேடிக் கொண்டிருக் கின்றார்கள்.

வாட்ட லூர் போரில் நெப்போலியனை வெல்லுதற்குரிய ஆற்றல்களைத் தந்தது. விளையாட்டு மைதானத்தில் நான் பெற்ற வாய்ப்புகள்தான் என்று வெற்றித்தலைவன் நெல்சன் கூறிய வாசகத்தை மீண்டும் மீண்டும் படியுங்கள்.

விளையாட்டு மைதானத்திலே அப்படி என்ன கிடக் கிறது? கிடைக்கிறது? வெறும் வெட்டவெளிதானே அது’ பொட்டல் மண்தானே என்று பேசுகிறீர்களா?

வெட்ட வெளியிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சுகங்களும் அறிவு முகங்களும் தாம் எத்தனை எத்தனை?

கொஞ்சம் குனிந்து காது கொடுங்கள்.

மைதானத்திற்கு வந்து சேர்கின்ற மக்களை எப்படி எப்படியெல்லாம் ஆடுகளங்கள் வாரி அணைத்து வாய்ப்புக்