பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


பூப்பந்தாட்டத்திலே ஒரே முறைதான் ஆடலாம். தவறே சரியோ ஒன்றுடன் முடிந்து போகிறது. கைப்பந்தாட்டத்தில் மூன்று முறை வாய்ப்பு. திறமாக சேர்ந்து விளையாடித்தாள் ஆகவேண்டும் என்ற கட்டாயம். கடுமையான கட்டளை. வாய்ப்புக்களால்தானே வீரர்கள் விந்தைமிகு சாதனைகளைப் புரிகின்றார்கள்.

ஒடுகளப்போட்டிகளில் வாருங்கள்.தாண்டும் போட்டியில் 6 முறை வாய்ப்புக்கள். எறியும் போட்டிகளில் அப்படித்தான்.6 முறைகள்.

உயரத் தாண்டும் போட்டிகளில் ஒரு உயரத்தைத்தாண்ட வாய்ட்புக்கள்.

அது மட்டுமா!

கூடி விளையாடினால்தான் ஒற்றுமை நெஞ்சங்களைக் கூட்டமுடியும். உயர்ந்த ஆற்றல்களைக் காட்டமுடியும். இதற்கான வாய்ப்புக்களைத்தான் விளையாட்டுகள் வழங்குகின்றன.

கூடைப்பந்தாட்டத்தில் கொடுத்து வாங்கி, பத்தடி உயரத்தில் உள்ள இலக்குக்குள் பந்தைப் போடுதல், இதற்கு எத்தனை ஒற்றுமை வேண்டும்! எப்படிப்பட்ட இனிய வாய்ப்புக்கள்.

கால் பந்தாட்டத்தில், வளைக்கோல் பந்தாட்டத்தில் ஒருவருக்கொருவர் பந்தைக் கொடுத்து வாங்கி ஒற்றுமையாக ஒடி ஆடி, இலக்கிற்குள் பந்தைச் செலுத்தும் பாங்கு.

தனி மனிதன் திறமையைவிட குழு ஒற்றுமைக்கான கோடி வாய்ப்புகள் .

கோகோ ஆட்டத்தில் ஒருமுறை அவுட்டானால், அவ்வளவுதான். கபாடி ஆட்டத்தில் ஒருமுறை அவுட்